ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பேஸ் வேரியன்ட் புதிய அம்சம் பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பேஸ் வேரியன்ட் மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட கிளாசிக் 350 விலை ரூ.1.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ். வசதி கிளாசிக் சிக்னல்ஸ் 350 வேரியன்ட்டிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டின் இறுதியில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது.
மேம்படுத்தப்பட்ட கிளாசிக் 350 மாடலில் பின்புறம் டிஸ்க் பிரேக் தவிர அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 346 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.8 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
கிளாசிக் 350 மாடலின் முன்புறம் 35 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 5-ஸ்டெப் மாற்றக்கூடிய டுவின் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்புறம் 280 எம்.எம். டிஸ்க், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளாக கிளாசிக் சிக்னல்ஸ் 350 இருக்கிறது. சிக்னல்ஸ் எடிஷனில் புதிய நிறங்கள் மற்றும் சிறுசிறு வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.