இங்கிலாந்து இளவரசி மேகன் மார்க்கலுக்கு பேய் பிடித்துவிட்டதாக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் பியர்ஸ் மோர்கன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 19ம் தேதி இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் மற்றும் அமெரிக்கா தொலைக்காட்சி நடிகை மேகன் மெர்க்காலுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் உலகளவில் பரபரப்பு பேச்சாக மாறியது.

தற்போது இங்கிலாந்து மக்களின் மிகவும் நேசத்திற்குரியவராக மாறிவிட்ட மேகன் மார்க்கல் குறித்து, அமெரிக்காவை சேர்ந்த பிரபல செய்தியாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான பியர்ஸ் மோகன் சர்ச்சைக்குரிய கருத்தை பொதுவெளியில் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், மெர்க்கல் எப்போது அரசகுடும்பத்து மருமகள் ஆனாரோ அன்றே அவருக்கு பேய்பிடித்துவிட்டது, அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் அதனை பிரதிபலிக்கின்றன. அவரது ஒவ்வொரு அசைவுகளும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் சொல்லப்போனால், அவர் அரச குடும்பத்து மருமகளாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு சிறந்த நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் குடும்ப வாழக்கையிலும் நடித்துக்கொண்டிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது” என பியர்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரபல பத்திரிகையாளரின் இந்தப் பேச்சு, அரண்மனை வட்டாரத்தை மட்டுமின்றி, இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவருக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.