விஜய் நடிப்பில் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் படம் பிகில். இப்படத்தில் ராயப்பன், மைக்கேல், பிகில் என்று மூன்று விதமான கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், அண்மையில், வெளியான இப்படத்தின் டிரைலர் யூடியூப்பில் 30 மில்லியன் பார்வையாளர்களையும், 2 மில்லியன் லைக்ஸும் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அதோடு, இதற்கு முன்னதாக இருந்த அனைத்து படங்களின் சாதனைகளையும் இப்படம் முறியடித்துள்ளது.

இப்படத்தின் போஸ்டரில் பிகில் தீபாவளிக்கு வெளியீடு என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியோ, பிகில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு முன் வெள்ளி அல்லது வியாழன் அன்று படத்தை வெளியிட்டால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பதால், தீபாவளிக்கு முன்பே படத்தை வெளியிடும் பிளானில் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதோடு, இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 59 நிமிடம் என்று சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, விவேக், கதிர், யோகி பாபு, இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய், கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.