திய 20 பவுண்ட்ஸ் நாணயத்தாள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளியிடப்படும் என இங்கிலாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது.

புதிய நாணயத்தாளில் பிரித்தானிய கலைஞர் ஜே.எம்.டபிள்யு டேர்னரின் உருவம் முதன்முறையாக பொறிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 1799 ஆம் ஆண்டு ரேற் பிரிட்டனில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஜே.எம்.டபிள்யு டேர்னரின் சுய உருவப்படம், டேர்னரின் மிக பிரபலமான The Fighting Temeraire’ ஓவியம் மற்றும் ‘Light is therefore colour’ என்கின்ற குறிப்பும் புதிய நாணயத்தாளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்தோடு டேர்னரின் கையெழுத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது புழக்கத்திலுள்ள 20 பவுண்ட்ஸ் நாணயத்தாளை அறிவிப்பு வெளியாகும் வரை பயன்படுத்த முடியும் என்றும் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னர் தற்போதைய 20 பவுண்ட் நாணயத்தாள் வழக்கொழியும் திகதி அறிவிக்கப்படும் என்றும் இங்கிலாந்து வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

அவ்வாறு புழக்கத்துக்கு வராத நாணயத்தாளை வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் வைப்பு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.