வழக்கமாக பூமிக்கு “மேலே” சூரியன் தெரியும், இரவில் நிலவும், நட்சத்திரங்களும் தெரியும். சில குறிப்பிட்ட விண்வெளி நிகழ்வுகளின் போது தொலைநோக்கி வழியாகவோ (பெரும்பாலும்) அல்லது வெறும் கண்களினாலோ (எப்போதாவது) அண்டை கிரங்கள் தெரியும். ஆனால் இவான் ஈடரின் கண்களுக்கு புறப்பட்ட ஒன்றே மிகவும் விசித்திரமான ஒன்றாக உள்ளது. இவான் ஈடர், ஹங்கேரியில் வசிக்கும் ஒரு அமெச்சூர் புகைப்படக்காரர். சமீபத்தில் இவான் ஈடர் எடுத்த ஒரு புகைப்படம் ஆனது வெளியான நொடிப்பொழுதில், “டக்கென்று” வைரல் ஆனது. சதியாலோசனை கோட்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் அந்த புகைப்படத்தில் அப்படி என்ன தான் உள்ளது?

புகைப்பட கலையை பழகி கொண்டு இருக்கும் அமெச்சூர் புகைப்படக்காரர் ஆன இவான் ஈடர், ஹங்கேரியின் தலைநகரமான புடாபெஸ்டின் வான்வெளி பகுதியில் காணப்பட்ட சந்திரனை அழகான முறையில் புகைப்படம் எடுக்க விரும்பி உள்ளார். ஆனால் சந்திரனுடன் சேர்த்து ஒரு “மர்மமான” கிரகத்தையும் புகைப்படம் எடுப்பார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆம் இவான் எடுத்த புகைப்படத்தில் சந்திர கிரகத்தின் பின்னணியில் ஒரு மர்மமான கிரகம் இருப்பதும் பதிவாகி உள்ளது.

விளிம்பில் தான் சந்திரன் இருக்கிறது, அப்போது அதன் அளவை நீங்கள் யூகித்து கொள்ளுங்கள்! பதிவான புகைப்படத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரும் கூட இவானால் அந்த “மர்மமான” கிரகத்தை பற்றிய எந்தவொரு பகுத்தறிவு விளக்கத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இவானுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாக புரிந்தது. புகைப்படத்தில் பதிவான கிரகம் ஆனது அளவில் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும் அல்லது அது நமது பூமி கிரகத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும்.

தனது புகைப்படத்தில் தோன்றும் “மர்ம கிரகம்” பற்றி மேலும் அறிய விரும்பிய இவான் அதை இணையத்தில் வெளியிட்டார். பின்னர் பற்றிக்கொண்டது வைரல் தீ! பொதுவெளியில் இவானின் புகைப்படம் பகிரங்கப்படுத்தப்பட்டவுடன், புகைப்படத்தில் காட்சிப்படும் அந்த “மர்ம கிரகம்” ஆனது ஒருவேளை “நிபிரு” என்று அழைக்கப்படும் ஒரு கிரகமாக இருக்கலாம் என்கிற ஊகங்கள் கிளம்ப தொடங்கியது. புகழ்பெற்ற நிபிருவின் இருப்பு பற்றி நிறைய கோட்பாடுகள் உள்ளன. ஆனால் இன்றுவரையிலாக அதன் இருப்பை நிரூபிக்க உறுதியான ஆதாரங்களை யாரும் கொண்டு வரவில்லை.