நாசா மற்றும் என்.எஸ்.ஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் சுமார் 12 ஆண்டுகள் ஆலோசகராக பணியாற்றியவர் டாக்டர். எரிக் நார்டன். அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய இவர், வெகு சமீபத்தில் எரிகற்கள் சுற்றுச்சூழல் நன்கு புரிந்துகொண்டு அதன் மேம்படுத்தப்பட்ட மாதிரியை உருவாக்கும் வகையில் எரிகற்கள் சுற்றுச்சூழல் அலுவலகத்தின் (Meteoroid Environment Office -MEO) திட்டத்தில் பணியாற்றினார்.

இங்கு இவர்கள் அடிப்படையில் வானத்தை கண்காணிப்பது, விண்கற்கள் மற்றும் பிற விண்வெளி பொருட்களை பின்தொடர்வது போன்றவற்றை செய்வர்.

ஜனவரி 22ம் தேதி, பூமியை பாதிக்கும் வகையில் இருக்கும் விண்கற்கள் மற்றும் வால்மீன்களை கண்காணிக்கும் பணிக்கு பொறுப்பாளரான எரிக், டெக்ஸாஸில் உள்ள மேக்டொனால்டு ஆய்வகத்திற்கு அழைக்கப்பட்டார்.

அந்த காலகட்டத்தில், பல்வேறு விதமான அறிவியல் கருவிகளின் துணையோடு, பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அடையாளம் தெரியாத விண்கலன்களை கண்டறியும் பணியில் இருந்தார் எரிக். அப்போது மிகப்பெரிய வடிவமும் அளவும் கொண்ட கட்டமைப்புகள் விண்ணில், தொடர் தொடராக, ஒரே நேர்கோட்டில் பூமியை நோக்கி வந்துகொண்டிருந்ததை பார்த்தார் எரிக்.

மூன்று மாத காலத்தில், அந்த விண்கலனின் திசையிலேயே பின்தொடர்ந்து அவற்றை கண்காணித்தார். பல மில்லியன் கிலோமீட்டர் பயணித்த அந்த அடையாளம் தெரியாத விண்கலன், இதுவரை பூமியின் வான்பரப்பில் நுழையவில்லை. எரிக்கின் கருத்துப்படி, வேற்றுகிரகவாசிகளின் விண்கலனில் உள்ள தொழில்நுடபம், நமது விண்கல தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு மேம்பட்டதாக தெரிகிறது.

அவர் மேலும் கூறுகையில், ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி தரவுகளின் படி இந்த அடையாளம் தெரியாத பொருட்கள், பூமியில் இருக்கும் உலோகங்களை விட மில்லியன் மடங்கு அதிக ஆற்றல் கொண்ட பொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிறார்.

இந்த அனுமானமானது டாக்டர்.எரிக் மற்றும் நாசாவில் பணியாற்றும் அவரது சக பணியாளர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விண்கலனின் புற ஊதாக்கதிர் படங்கள், இந்த விண்கலனில் பூமியை பாதுகாக்கும் காந்தப்புலம் இல்லாமல், காஸ்மிக் துகள்களால் ஆன வேறு ஏதோ புலம் இருப்பதை காட்டுகிறது.