பெருந்தோட்டப்புறத்தில் உள்ள 354 பாடசாலைகளுக்கு தலா 2 ஏக்கர் காணிகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் உள்ளிடோரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.