பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், பின்பு இந்நிறுவனம் போர்டல் மற்றம் போர்டல் பிளஸ் என்ற இரண்டு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

பின்பு வீடியோ கால் வசதி மற்றும் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போர்டல் மற்றம் போர்டஸ் பிளஸ் சாதனங்கள். மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பேஸ்புக் நிறுவனத்தின் போர்டல் சாதனம் 10-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதி மற்றும் 1280×800 பிக்சல் திர்மானம் கொண்டுள்ளது, பின்பு போர்டல் பிளஸ் சாதனம் பொறுத்தவரை 15-இன்ச் டிஸ்பிளே 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த சாதனங்களில் ஏ.ஐ போர்டல் ஸ்மார்ட் கேமரா மற்றும் சவுன்ட் தொழில்நுட்பம் போன்றவை இடம்பெற்றுள்ளதால் இந்த சாதனத்தை தொடாமல் பயன்படுத்த முடியும். பின்பு இவற்றின் திரையில் உள்ள அனைவரும் தெரியும் படி தானாக சூம் மற்றும் அசைந்து கொள்ளும் தன்மை இவற்றுள் உள்ளது.

இந்த போர்டல் சேவை மூலம் பேஸ்புக் நண்பர்கள் மற்றும் கனெக்ஷன்களை மெசன்ஜரில் இருந்து மிக அருமையாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதேபோன்று இதில் உள்ள கரூப் கால் அம்சம் என்னவென்றால் ஒரே நேரத்தில் ஏழு நபர்களுடன் வீடியோ கால் செய்ய முடியம்.

பின்பு போர்டல் கொண்டு இசையை கேட்பதும், விரும்பிய நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும், அதேபோன்று இந்த சாதனங்களில் கேமரா கவர் வழங்கப்பட்டு இருப்பதால், கேமரா லென்ஸை எப்போது வேண்டுமானாலும் மறைக்க முடியும். இருந்தபோதிலும் அழைப்புகள் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள் தொடர்ந்து வரும்.

குறிப்பாக இந்த சாதனங்களை பேஸ்புக் கடவுச்சொல் கொடுத்து பயன்படுத்த வேண்டும், பின்பு போர்டல் சாதனத்தில் மேற்கொள்ளப்படும் வீடியோ அழைப்புகளை பேஸ்புக் கேட்கவோ அல்லது பார்க்கவோ செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களை விரைவில் அமேசான் வலைதளத்தில் வாங்க வேண்டும். போர்டல் இந்திய விலை மதிப்பு ரூ.14,717-ஆக உள்ளது. அதேபோல் போர்டல் பிளஸ் விலை ரூ.25,810-ஆக உள்ளது.