பொதுமக்களிடம் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்த பிரபல நடிகை ஓவியா, நேற்று வெளியான ‘90 எம்.எல்’ படத்தின் டீசர் மூலம் இழந்துள்ளார்.

‘களவாணி’ படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர் ஓவியா. அதையடுத்து பல படங்களில் நடித்தார். இருந்தாலும் பொதுமக்களிடம் பெயர் வாங்க முடியவில்லை.

இந்நிலையில் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு லட்சக்கணக்கானவர்களின் அன்பு கிடைத்தது. ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.

அந்நிகழ்ச்சிக்குப் பின்னான ஒன்றரை ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்த வரவேற்புகளை நேற்று வெளியான ஒன்றரை நிமிட டீசர் மூலம் இழந்துள்ளார். ஆம், தற்போது அவர் நடித்து வரும் படம் ‘90 எம்.எல்.. நேற்று இந்தப் படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் பேசும் வசனங்கள் நடிப்பு ஆகியன பலத்த எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறது. படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பொதுமக்கள் அனைவரும் ஓவியா மீது நல்ல மதிப்பும மரியாதையும் வைத்திருந்தனர். ஆனால், அவர் அதையெல்லாம் பொருட்படுத்தால் இப்படியொரு படத்தில் நடித்து பொதுமக்களின் மனங்களை வருத்தமடையச் செய்துள்ளார்.