ப்ரியா பிரகாஷ் வாரியரின் கெரியர் துவங்கிய வேகத்தில் பிரச்சனையில் சிக்கி கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது என்று மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு அடார் லவ் படத்தில் வரும் பாடலில் கண்ணடித்து ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த கண்ணடித்த காட்சி பிரபலமானதால் கதையை மாற்றி எழுதி ப்ரியாவை ஹீரோயினாக போட்டு படத்தை வெளியிட்டனர். படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. படத்தை பார்த்தவர்களும் ப்ரியாவின் நடிப்பை கிண்டல் தான் செய்தார்கள்.

ஒரு அடார் லவ் படத்தின் இயக்குநர் உமர் லுலுவுக்கு ப்ரியாவை ஹீரோயினாக போட விருப்பமில்லை. இது குறித்து அவர் கூறியதாவது, தயாரிப்பு தரப்பு கட்டாயப்படுத்தியதால் அவரை ஹீரோயின் ஆக்கினேன். ப்ரியாவை விட நூரின் ஷரீஃப் தான் நல்ல நடிகை. நான் ப்ரியாவுடன் டச்சில் இல்லை என்றார்.

உமர் லுலுவின் பேட்டியை பார்த்த ப்ரியா நான் வாயை திறந்தால் பல விஷயம் வெளியே வரும் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்து அதை நீக்கிவிட்டார். ப்ரியாவின் செயல் மலையாள திரையுலகினருக்கு பிடிக்கவில்லையாம். ஒரு அடார் லவ் படத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் யாரும் ப்ரியாவை அணுகி வாய்ப்பு கொடுக்கவில்லை.

ப்ரியா ஸ்ரீதேவி பங்களா என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அந்த படம் தன் மனைவி ஸ்ரீதேவியை அசிங்கப்படுத்துவதாக தயாரிப்பாளர் போனி கபூர் கோபம் அடைந்துள்ளார். படத்தை பரண் மேல் ஏற்றாமல் விட மாட்டேன் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

போனி கபூரின் கோபத்திற்கு ஆளான ப்ரியா வாரியரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பாலிவுட்காரர்கள் விரும்பவில்லையாம். ப்ரியாவின் கெரியர் துவங்கிய வேகத்தில் முடியப் போகிறது என்று பேச்சு கிளம்பியுள்ளது. ப்ரியாவை தங்களின் படத்தில் நடிக்க வைக்க யாரும் விரும்பவில்லையாம்.