வாட்ஸ்அப்பில் ‘மோமோ’ என்ற தற்கொலை கேம் பரவுவதால், பெற்றோர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், ப்ளுவேல் என்ற தற்கொலை கேம் இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கேமை விளையாடும் சிறுவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டதே அதற்கு காரணம். இதையடுத்து, இந்த கேமின் ஆபத்தை உணர்ந்த சர்வதேச நாடுகள், அதை தடை செய்தன. இந்நிலையில், தற்போது ‘மோமோ’ என்ற தற்கொலை கேம் வாட்ஸ்அப்பில் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேஸ்புக்கில் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு போன் செய்ய வேண்டும் என தொடங்கிய இந்த சேலஞ்ச், சமூக வலைத்தளங்களில் கிகிசேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச் வைரலாவதைப் போல, வாட்ஸ்அப்பில் பரவத் தொடங்கியது.

இந்த சேலஞ்சில் பங்கேற்க, வாட்ஸ்அப்பில் பகிரப்படும் மோமோ என்ற எண்ணை சேமித்து, அதற்கு மெசேஜ் செய்ய வேண்டும். அந்த மோமோ தொடர்பு எண் பார்க்க மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் பேய் போல இருக்கும்.