ஒக்­ரோ­பர் 26ஆம் திக­தி­யன்று மகிந்த ராஜ­பக்ச தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­ட­ தற்­குச் சில வாரங்க­ளுக்கு முன்­னர் ஜாதிக ஹெல உறு­மய என்ற அதி­தீ­விர சிங்­கள – பௌத்த கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­சர் சம்­பிக்க ரண­வக்க என்பவர், ‘‘தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்யவேண்­டும்’’ என நாடாளு­மன்­றத்­தில் வெளிப்­ப­டை­யா­கக் கூறி­யி­ருந்­தார். இவ­ரது கருத்தை மறு­த­லித்த மகிந்த அணி, அவர்களை விடு­தலை செய்­வது நாட்­டுக்கு ஆபத்­தா­னது என்று கூறி­யி­ருந்­தது.

அந்­தக் கட்­டத்­தில், சம்­பிக்க ரண­வக்­கவை முன்­னி­றுத்தித் தாம் ஆட்­சிக்­குக் கொண்டு வந்த கட்­சி­யான ஐக்கிய தேசி­யக் கட்­சி­யின் முன்­மொ­ழி­வு­டன் தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விப்­ப­தற்­கான ஏற்­பாட்­டைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புச் செய்­தி­ருக்­க­லாம். ஆனால், அது அதி­லி­ருந்து தவ­றி­விட்­டது.

மகிந்­த­வைக் கையுக்­குள் போட்­டி­ருந்­தால்  கைதி­களை விடு­வித்­தி­ருக்­க­லாம்
முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவை, தற்­போ­தைய அரச தலை­வரானவர் தலைமை அமைச்சராக்கிய­தன் பின்­னர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ரவை மகிந்த அணி கோரி நின்­ற­போது இந்­தக் கைதி­கள் விட­யத்தை முன்­னி­றுத்­தித் தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்பு நகர்­வு­களை ஏற்படுத்தியிருக்கக்கூ­டிய வாய்ப்­புக்­கள் அதி­க­மாக இருந்­தன. மகிந்த அணி­யின் முக்­கிய, மூத்த அரசியல்வாதியான வாசு­தேவ நாண­யக்­கார கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பில் நாடா­ளு­மன்­றப் பிரே­ரணை ஒன்றை முன்­வைக்­க­வி­ருப்­ப­தாக வெளிப்­ப­டை­யா­கவே அறி­வித்­தி­ருந்­தார்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்­ப­டுத்தி, நகர்­வு­களை மேற்கொண்­டி­ருந்­தால், கைதி­கள் விட­யத்­தில் அதிக பலன் கிடைத்­தி­ருக்­கும். நிலமை மாற்­றப்­பட்டு மீத­முள்ள இரண்டு வருட காலப்­ப­குதி வரைத் தற்­போ­தைய அரசு தொட­ரு­மா­க­வி­ருந்­தால், சில பல வாக்­கு­று­தி­க­ளைக் காட்­டிக் கூட்­ட­மைப்பு ரணி­லின் பின்­னால் இழு­ப­ட­லாமே தவிர, அதற்கு மேல் அது எதை­யும் சாதிப்­ப­தற்கு வாய்ப்­பில்லை.

மகிந்த விடு­வித்­தால், எதிர்ப்­பு­கள் குறை­வ­டை­யும்
30வரு­ட­கா­லப் போரை முடி­வுக்­குக் கொண்டு வந்த பெருமை சிங்­கள மக்­கள் மத்­தி­யில் மகிந்­த­வுக்கே உண்டு. அத­னால் அர­சி­யல் கைதி­களை விடு­விப்­ப­தற்கு மகிந்த முடி­வெ­டுத்­தால் பௌத்த பீடங்­கள் மட்­டு­மல்­லாது, கூலித் தொழில் செய்­யும் சாதா­ரண சிங்­க­ள­வர்­கள்­கூட மகிந்த ராஜ­பக்­சவை எதிர்த்­துக் கதைக்­கப் போவதில்லை. அதற்­கான திரா­ணி­யும் மகிந்­த­வுக்கு மட்­டும் தான் உண்டு. இன்னொரு வகை­யில் பார்த்­தால், மகிந்த ஆட்­சிக் காலத்­தி­லேயே இந்­தக் கைதி­க­ளில் பெரும்பால­னோர் கைது செய்­யப்­பட்­டார்­கள்.

அவர்­களை விடு­விக்­கும் தர்­மீ­கப் பொறுப்­பும் மகிந்­த­வுக்கே உண்டு. மகிந்த அவ்­வா­றான தீர்­மா­னம் ஒன்றை எடுக்­கும்­போது இது­வி­ட­யத்­தில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சிங்­க­ளக் கட்­சி­கள் பல மகிந்த அணிக்­குள் இருப்­ப­தால், அவர்­க­ளின் எதிர்ப்பு சத்­த­மின்றி அடக்­கப்­ப­டும். அத்­தோடு கைதி­கள் மகிந்­த­வால் விடு­விக்­கப்­படும் பட்­சத்­தில் மாத்­தி­ரமே குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்ட கைதி­கள் உயிர் அச்­சு­றுத்­தல் இன்றி உலாவ முடி­யும்.

குழப்­பங்­களை விளை­விக்­கும்  ஏற்­பா­டு­கள்
தற்­போ­தைய குழப்­பச் சூழ­லில் கைதி­கள் விடு­விக்­கப்­பட்­டால்­கூடப் பௌத்த பிக்­கு­கள், சிங்­கள ஊட­கங்­கள் என்­பன அவர்­க­ளுக்கு எதி­ரான பரப்­பு­ரை­க­ளைச் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் மிக­வும் துல்­லிய­மா­கச் செய்வார்கள்.

சிங்­க­ளப் பெரும்­பான்மை இனத்­துக்­குள் வாழ்­கின்ற ஒரு சிறு­பான்மை இனமே தமிழ் மக்­கள் என்­ப­தைத் தமிழ்த் தலை­வர்­கள் விளங்­கிக் கொள்­வ­தில்லை. கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 14பேரும் ஒப்­ப­மிட்டு ஐக்­கிய மக்­கள் முன்­ன­ணியை (குறிப்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே) ஆத­ரிக்­கும் நிலைப்­பாட்டை எடுத்துள்ளோம் என்ற விட­யத்தை எழுத்து மூலம் வழங்­கி­ய­தன் பின்­னர் அர­சி­யல் கைதி­கள் என்று எவ­ரும் சிறை­க­ளில் இல்லை என்ற கோசம் சிங்­க­ளத் தரப்­பு­கள் மத்­தி­யில் மேலெ­லத் தொடங்­கி­விட்­டது. சகஸ்­டம் வத ஏகம் மாலிக என்று சமஸ்­கி­ருத மொழி­யில் ஒரு வாச­கம் உண்டு.

ஆயி­ரத்­தை­யும் சொல்லு, ஒன்­றை­யும் எழு­தாதே என்­பது அதன் அர்த்­தம். இந்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அறி­வித்­த­வு­டன் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை மிக­வும் பரி­தா­ப­க­ர­மாக மாறியி­ருக்­கி­றது.

வவு­ணதீ­வுக் குழப்­பத்­து­டன் அனைத்து அரசி­யல் கைதி­க­ளை­யும்   தொடர்­பு­ப­டுத்தி விட்­டார்­கள்
வவு­ண­தீ­வுப் பகு­தி­யில் இரண்டு பொலி­சார் கொல்­லப்­பட்­டமை, அதைத் தொடர்ந்து வட்­டக்­கச்­சி­யைச் சேர்ந்த ஒரு­வர் கைதா­கி­யமை. அந்த விட­யத்­துக்­கும் விடு­த­லைப் புலி­க­ளின் போரா­ளி­க­ளுக்­கும் தொடர்­புண்டு என்பதா­கக் கதை­கள் பர­வி­யமை, விசா­ர­ணை­கள் முன்­னெடுக்­கப்­பட் டமை என எல்­லாமே சிறைக்­குள் இருக்கின்ற முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கும், இது­வரை மறு­வாழ்வு அளிக்­கப்­பட்டு மகிந்த அர­சால் விடுவிக்கப்பட்ட 12ஆயி­ரத்து 600வரை­யான முன்னாள் போராளி களுக்­கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் விட­ய­மாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அர­சி­யல் கைதி­க­ளை­யும் தாண்டி முழுத் தமிழ் மக்­க­ளை­யும் கூடப் பாதிப்­புக்­குள்ளாக்கு வதற்­குக் குறித்த விட­யம் ஆரா­யப்­பட்டு வரு­கி­றது. இரா­ணு­வத் தள­பதி ஒரு­வர் அது பற்றி வெளிப்­ப­டை­யா­கவே குறிப் பிட்­டும் இருக்­கி­றார்.

வவு­ண­தீ­வுப் பொலி­சா­ரைக் கொன்­று­விட்டு அந்த இரு­வ­ரி­ட­மும் இருந்த கைத்­துப்­பாக்­கிக­ளைக் கொலையாளிகள் எடுத்­துச் சென்­றுள்­ள­னர் என்ற செய்தி மீண்­டும் புலி­கள் எழுந்து விட்­டார்­கள் எனச் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் பரப்­புரை செய்­வ­தற்கு எந்­த­வித தடை­க­ளு­மின்­றிப் பயன்­ப­டுத்­தப்­ப­டும். வெறும் வாயு­டன் ‘ஆ’ வென்­ற­படி அவலை எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருந்த இன­வா­தத் தரப்­புக்கு பெருந்­தொகை அல்வாவாகவே குறித்த விட­யம் அமைந்­தி­ருக்­கி­றது.

நல்­லாட்­சி­யில் கைதி­க­ளின் விடு­தலை விட­யத்­துக்கு ஓர் உதா­ர­ணம்
நல்­லாட்சி நல்ல முைற­யில் இயங்­கிக் கொண்­டி­ருந்­த­போது கிளி­நொச்­சி­யைச் சேர்ந்த அர­சி­யல் கைதி­யான ஆனந்த சுதா­க­ர­னின் மனைவி இறந்­தி­ருந்­தார். அந்­தச் சாவு வீட்டுக்கு ஆனந்த சுதா­க­ரன் சிறைச்­சாலை அதிகா­ரி­க­ளால் கொண்டு வரப்­பட்­டி­ருந்­தார். மனை­வி­யின் இறு­திக் கிரி­யை­கள் முடிந்­த­த­தும், ஆனந்த சுதாகர­னைச் சிறைச்­சாலை ஊழி­யர்­கள் மீண்­டும் சிறைக்கு அழைத்­துச் செல்­வ­தற்கு ஆயத்­த­மா­கி­ய­போது, ஆனந்த சுதா­க­ர­ னின் மகள் தந்­தை­யு­டன் சிறை பஸ்­சுக்­குள் ஏற முற்­பட்­டாள். அப்போது அவள் தடுக்கப்பட்டாள். இந்­தச் சம்­ப­வத்­தின் பின்­ன­ணி­யில் மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் ஆனந்த சுதா­க­ரனை விடுவிப்­ப­தா­கக் கூறப்­பட்ட போதி­லும் அது இன்­று­வரை நடக்­க­வில்லை என்­பதே உண்மை.

நிலமை இவ்­வா­றி­ருக்க 2.12.2018 அன்று மாலை­யில் சிங்­க­ளத் தொலைக்­காட்­சிச் செய்­தி­க­ளில் மகிந்த அணி­யி­ன­ரால் இரண்டு செய்­தி­கள் முக்­கி­யத்­து வப்­ப­டுத்­தப்­பட்­டன. ஒன்று – தமிழ் அர­சி­யல் கைதி­கள் என்று கூறப்­ப­டு­ப­வர்­கள் சிங்­கள பௌத்த நாட்­டுக்கு எத்­த­கைய பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­கள் எனப் பட்டியலிடப்பட்­டது. மற்­றை­யது – மகிந்த அணி­யின் முக்­கி­யஸ்­தர்­க­ளில் ஒரு­வ­ரான சுசில் பிறேம ஜெயந்த ‘‘அர­சி­யல் கைதி­கள் என்று ஒரு­வர்­கூ­டச் சிறை­க­ளில் இல்லை’’ என்று கூறி­யி­ருந் தார்.

இதையே முன்­னாள் நீதி­ய­மைச்­ச­ரான தலதா அத்­துக் கோற­ளை­யும் கூறி­ யி ருந்­தார். இந்­தச் சூழ­லில் அவர்களை விடு­விக்க வேண்­டும் என ஏற்­க­னவே குரல் கொடுத்த சம்­பிக்க ரண­வக்க, வாசு­தேவ நாண­ யக்­கார இனி­மேல் அது­பற்றி வாய்­தி­றக்­கப் போவ­தில்லை என்று நம்­ப­லாம்.

இவற்றையெல்லாம் எடுத்து நோக்கும்போது, இனி­வ­ரும் காலங்­க­ளில் தமி­ழ­ருக்கு என்ன நடக்­கப்­போ­கி­றது என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே அர­சி­யல் கைதி­கள் விய­டம் குறித்த சிங்களப் பேரின வாதத்­தின் அணுகுமுறை­யி­லி­ருந்து ஊகித்­த­றிந்து கொள்ள முடி­கின் றது. இனிக் கைதி­களை விடு­மாறு இந்­தி­யாவோ, ஐக்­கிய நாடு­கள் சபையோ இலங்கை அர­சைக் கேட்­டுக் கொள்­ளப்­போ­வ­தில்லை. சிங்­க­ளத் தேசிய வாதிகளுக்கு எதி­ராக நின்று தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விப்­ப­தற்கு மகிந்­த­வைத் தவிர எவ­ரா­லும் முடியாது என்­பதே உண்மை.