ஏன் விரை­வில் ஒரு தேர்­தல் இடம்­பெ­றப்­போ­கி­றது என மகிந்த ராஜ­பக்ச யூகிக்­கி­றார்?
தலைமை அமைச்­ச­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை வாக்­க­ளிப்­பின் பின்­னர் கூட்டு அர­சி­லி­ருந்து வௌியே­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 16பேர் கொண்ட குழு, அக­தி­கள் போல அலைந்து திரிந்து, தங்­களை ஏற்­றுக்­கொள்ள எந்­த­வொரு கட்­சி­யு­மில்­லா­மல் இறு­தி­யாக சிறி­லங்கா மக்­கள் முன்­ன­ணி­யு­டன் சங்­க­ம­மா­கி­யுள்­ளது.

இது தொடர்­பாக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டம் கருத்­துத் தெரி­வித்த 16பேர் குழு­வின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டபிள்யூ.டி.கே சென­வி­ரட்ன, இனி­மேல் தங்­களை எவரும் 16பேர்க் குழு­வென குறிப்­பி­டக் கூடாது என­வும், தாங்­கள் கூட்டு அரசை விட்டு வில­கிய காலத்­தில் இருந்தே எதிர்க்­கட்­சி­யாக இருந்து வந்­த­தா­க­வும், இப்­போது தங்­க­ளின் பேதங்­கள், கருத்து வேறு­பா­டு­களை மறந்து சிறி­லங்கா மக்­கள் முன்­ன­ணி­யு­டன் இணைந்து தற்­போ­தைய கூட்டு அரசை பத­வி­யில் இருந்து அகற்­று­வதே தங்­கள் கொள்கை என­வும் கூறி­னார். அத்­து­டன் சிறி­லங்கா மக்­கள் முன்­ன­ணி­யின் அங்­கத்­து­வம் பெற­வேண்­டிய தேவை தங்­க­ளுக்கு இல்லை என­வும் கூறி­னார்.

16 பேர் குழு­வின் உறுப்­பி­னர்
லக்ஸ்­மன் யாபா அபே­வர்­தன
வெளி­யிட்டு கருத்து
இந்த 16பேர் குழு­வின் மற்­று­மொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான லக்ஸ்­மன் யாப்பா அபே­வர்­தன இது பற்­றிக் கூறு­கை­யில், தாங்­கள் சிறி­லங்கா மக்­கள் முன்­ன­ணி­யின் அடுத்த குழுக்­கூட்­டத்­திற்கு அழைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும், அந்­தக் கூட்­டம் மகிந்த ராஜ­பக்­ச­வின் கொழும்பு இல்­லத்­தில் ராஜ­பக்­ச­வின் தலை­மை­யில் நடை­பெ­ற­வுள்­ள­தா­க­வும், அத்­து­டன் சிறி­லங்கா மக்­கள் முன்­ன­ணி­யு­டன் ஒரே கட்­சி­யாக இணைந்து அடுத்து வர­வுள்ள தேர்­த­லின்­போது செயல்­பட உள்­ள­தா­க­வும் கூறி­னார்.
16பேர் குழு­வின் உறுப்­பி­னர்­க­ளான திலங்க சும­தி­பால, தயா­சிறி ஜய­சே­கர மற்­றும் எஸ்.பி.திசா­நா­யக போன்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இந்­தச் சந்­திப்­பின்­போது பிர­சன்­ன­மாகி இருக்­க­வில்லை.

இதற்­கி­டை­யில் தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வர் விமல் வீர­வன்ச, அர­சி­லி­ருந்து பிரிந்­து­ வந்த எவ­ரை­யும் தான் அன்­பு­டன் வர­வேற்­ப­தா­க­வும், தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யின்­போது அதற்கு ஆத­ர­வாக செயல்­பட்­ட­மைக்கு 16பேர் கொண்ட குழு­வி­னரைப் பாராட்­டு­வ­தா­க­வும் தெரி­வித்­தார். அத்­து­டன் ராஜ­பக்­ச­வின் கரங்­க­ளைப் பலப்­ப­டுத்தி ராஜ­பக்­சவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக்கி, இந்தக் கூட்டு அரசை வீழ்த்தி அர­ச­மைப்­புக்­கான 20ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வோம் என எதிர்­பார்ப்­ப­தா­க­வும் கூறி­னார்.

16பேர் குழு­வின் மற்­றொரு உறுப்­பி­ன­ரான சுசில் பிரேம ஜயந்­த­வி­டம் நீங்­கள் அர­ச­த­லை­வர் தேர்­த­லில் எவ­ருக்கு ஆத­ர­வ­ளிப்­பீர்­கள் என கேட்­கப்­பட்ட பொழுது, அவர் அதற்கு இன்­னும் காலம் இருக்­கி­றது என­வும், தற்­ச­ம­யம் தாங்­கள் கூட்டு எதி­ர­ணி­யு­டன் இணைந்து ஏனைய தேர்­தல்­களை எதிர்­கொள்­ளப் போவ­தா­க­வும் கூறி­னார்.

‘‘நியூ­யோர்க் டைம்ஸ்’’ 
பற்­ற­வைத்­துள்ள வெடி
நியூ­யோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யில் அண்­மை­யில் வௌியான ஒரு செய்­தி­யில், இலங்கை சீனா­வி­ட­மி­ருந்து பல வகை­யி­லும் கடன்­க­ளைப்­பெற்று சீனா­வின் கைப்­பி­டிக்­குள் சிக்­கிக்­கொண்­டி­ ருக்­கி­றது என­வும், முன்­னைய அர­சின் ஆட்­சி­யில், மகிந்த ராஜ­பக்­ச­வின் அர­ச­த­லை­வர் தேர்­தல் பரப்­பு­ரை­க­ளுக்­காக சீனா பெருந்­தொகை நிதியை வழங்­கி­யி­ருந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

2015ஆம் ஆண்டு நல்­லாட்சி நாட்­டில் மலர்­வ­தில் முக்­கிய பங்­காற்­றிய பிர­ஜை­கள் கூட்டு நிர்­வா­கங்­கள் குழு, வெகு அண்­மை­யில் வௌியா­கி­யுள்ள பெரிய ஊழல் விவ­கா­ர­மா­கக் கரு­தப்­ப­டும், 2015ஆம் ஆண்டு அர­ச­த­லை­வர் தேர்­தல் பரப்­பு­ரை­க­ளுக்­காக சீனா, மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு வழங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டும். நிதி உதவி பற்­றிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு அரச தலை­வ­ரை­யும், தலைமை அமைச்­ச­ரை­யும் கேட்­டுள்­ளது.

சீனா இந்­தக் குறிப்­பிட்ட நிதியை சைனா மேர்ச்­சன்ற் போர்ட் ஹோல்­டிங் நிறு­வ­னம் (CHINA MERCHANT PORT HOLDINGS COMPANY) மூலம் காசோ­லை­யாக அல­ரி­மா­ளி­கைக்கு அனுப்­பி­யி­ருந்­த­தா­க­வு।ம், அத­னைப் பெற்­றுக்­கொண்­ட­வர் ஒரு பௌத்த பிக்கு என­வு।ம், அந்­தப் பணத்­திற்கு என்ன நடந்­துள்­ளது என்­பது ஆரா­யப்­ப­ட­வேண்­டு­மெ­ன­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது சம்­பந்­த­மாக பிரதி அமைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக ஏற்­க­னவே நிதிக்­குற்­றங்­களை விசா­ரணை செய்­யும் பிரி­வி­டம் குற்­றச்­சாட்­டொன்­றைப் பதிவு செய்­துள்­ளார்.

முன்­னாள் மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் அஜித் நிவாட் கப்­ரால் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச ஆகி­யோர் குறித்த விட­யம் தொடர்­பாக உப்­புச் சப்­பற்ற கருத்­துக்­க­ளைத் தெரி­விக்­கின்­ற­னர். இந்­தப் பணம் மகிந்த ராஜ­பக்­ச­வி­ட­மி­ருந்து மீளப்­பெ­றப்­பட வேண்­டும் என்­ப­து­தான் பிர­ஜை­கள் கூட்டு நிர்­வாக இணைப்­பா­ளர் சமன் ரட்­ண­பி­ரி­ய­வின் நிலைப்­பா­டா­கும்.

மகிந்த தரப்­பி­னர் மீண்­டும்
ஆட்­சிக்கு வரு­வதை நாட்டு மக்­கள்
ஏற்­கப்­போ­வ­தில்லை என்­கி­றார்
சமன் ரட்­ண­பிரிய
சர்­வா­தி­கா­ரப் போக்­கில் ஆட்­சி­பு­ரிந்த மகிந்த ராஜ­பக்ச மற்­றும் அவ­ரது சகோ­த­ரர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோர், மீண்­டும் ஆட்­சிக்கு வரு­வதை பொது­மக்­கள் எந்தச் சந்­தர்ப்­பத்­தி­லும் அனு­ம­திக்­கக் கூடாது. இந்த இரண்டு சகோ­த­ரர்­க­ளை­யும் மக்­கள் எப்­ப­டி­யா­வது ஓரங்­கட்­டி­விட வேண்­டும் என­வும் சமன் ரட்­ண­பி­ரிய கூறி­யுள்­ளார்.

அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­கா­ரம் தொடர்­பாக 7.5மில்­லி­யன் டொலர்­களை அப்­போ­தைய அர­ச­த­லை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் தரப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டமை தொடர்­பாக இலங்கை மற்­றும் சீனா ஆகிய இரு நாடு­க­ளின் அர­சு­க­ளும் தனித்­த­னி­யாக விசா­ர­ணை­கள் நடத்­த­வேண்­டு­மென ஐக்­கிய தேசி­யக் கட்சி வலி­யு­றுத்­து­கி­றது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹர்­சன ராஜ­க­ருணா ஊட­கங்­க­ளுக்குக் கருத்­துத் தெரி­விக்­கை­யில் சீனா­வின் ‘‘ஒரு­பாதை, ஒரு­ வழித்தடம்’’ என்ற தொனிப்­பொ­ரு­ளின் அடிப்­ப­டையே நூறு வீதம் ஊழல் அற்­றது என்­ப­து­தான். இந்த துறை­முக நிறு­வ­ன­மும் சீன நாட்­டி­னது என்ற கார­ணத்­தால், சீன அர­சும் இந்த ஊழல் பற்றி­ய­தொரு விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்­டும் என­வும், ஐக்­கிய தேசி­யக் கட்சி இது சம்­பந்­த­மாக அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வொன்­றின் ஊடாக விசா­ரணை நடத்­த­வேண்­டும் என­வும் தாங்­கள் அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிரி­சே­ன­வைக் கேட்­டுக் கொண்­டுள்­ள­தா­க­வும் கூறி­னார்.

இங்கு குறிப்­பிட்­டுள்ள சீன துறை­முக நிறு­வ­னம் ஏற்­க­னவே அவர்­க­ளின் முன்­னைய நிர்­வாக ஊழல் கார­ண­மாக பங்­க­ள­தேஷ் மற்­றும் பிலிப்­பைன்ஸ் ஆகிய நாடு­க­ளின் கறுப்­புப்ப பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது என­வும் கூறிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ராஜ­க­ருணா, கிராம மக்­க­ளுக்கு ராஜ­பக்ச தரப்­பி­னர் துணி­ம­ணி­கள், மணிக்­கூ­டு­கள் போன்­ற­வற்றை இல­வ­ச­மாக விநி­யோ­கித்­த­மை­யைத் தாம் நேரில் கண்­ட­றிந்­துள்­ள­தா­கக் கூறி­ய­து­டன், கட்­டா­யம் இது சம்­பந்­த­மாக விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மெ­ன­வும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

நிதி­மோ­சடி இடம்­பெற்­றி­ருப்­பின்
மகிந்­த­வுக்கு எதி­ராக
சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு
சவால் விடுக்­கி­றது இணை­யத்­தள
ஊட­க­வி­ய­லா­ளர் அமைப்பு
இணை­யத்­தள ஊட­க­வி­ய­லா­ளர்­கள் தேசிய இயக்­கம், இலங்கை அர­சுக்கு ராஜ­பக்ச குடும்­பத்­து­டன் இர­க­சிய உற­வு­கள் எது­வும் இல்­லாத பட்­சத்­தில், சம்­பந்­தப்­பட்ட இந்த நிதி மோசடி செய்த மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கும்­படி சவால் விடு­வித்­துள்­ளது. அம்­பாந்­தோட்டை துறை­முக நிர்­மா­ணம் தொடர்­பான முன்­னைய அர­சின் கொடுக்­கல் வாங்­கல்­க­ளின்­போது 7.6மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் நிதி­மோ­சடி இடம்­பெற்­றமை தொடர்­பான குற்­றச்­சாட்­டுக் குறித்து விசா­ரணை மேற்­கொள்ள இதுவே சரி­யான தரு­ணம் என்­றும், அர­ச­த­லை­வர் ஆணைக்­குழு உட­ன­டி­யா­கவே இதற்­னாக நட­வ­டிக்­கை­எ­டுக்­க­வேண்­டு­மெ­ன­வும் இணை­யத்­தள ஊட­க­வி­ய­லா­ளர் தேசிய இயக்­கத்­தின் தலை­வர் சது­ரங்க டி.அல்­விஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இதே­வேளை ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­ட­மி­ருந்து 1.1மில்­லி­யன் ரூபா நிதியை தேர்­தல் பரப்­பு­ரைச் செயற்­பா­டு­க­ளுக்­காக மகிந்த ராஜ­பக்ச பெற்­றுக்­கொண்­டமை பற்றி பேச்­சுக்­கள் அந்த நாட்­டு­டன் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருந்­த­தா­க­வும் அமைச்­சர் லக்­சு­மன் கிரி­யெல்ல தெரி­வித்­தார்.
மறு­பு­றத்­தில் முன்­னாள் மத்­திய வங்கி ஆளு­நர் அஜித் நிவாட் கப்­ரல் மகிந்த ராஜ­பக்­ச­விற்கு எதி।­ரான நியூ­யோர்க் ரைம்ஸ் பத்­தி­ரி­கை­யின் குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­துள்­ளார். அத்­து­டன் இலங்கை சீனா­வி­டம் கடன்­பட்டு அந்த நாட்­டுக்கு அடி­மை­யா­கி­விட்­டது போன்­ற­தொரு அபிப்­பி­ரா­யத்தை உரு­வாக்­கு­வதே நியூ­யோர்க் ரைம்ஸ் பத்­தி­ரி­கை­யின் குறிக்­கோள் என­வும் அஜித் நிவாட் கப்­ரல் தெரி­வித்­தார்.

அத்­தோடு குறித்த கட்­டு­ரை­யின் ஆசி­ரியை தனது கட்­டுரை தொடர்­பா­கத் தம்மை பேட்டி கண்­ட­போது தான் தெரி­வித்த எந்த விப­ரங்­க­ளும் நியூ­யோர்க் பத்­தி­ரி­கை­யில் வெளி­வ­ர­வில்லை என்­றும் தெரி­வித்த முன்­னாள் மத்­திய வங்கி ஆளு­நர், மகிந்த ராஜ­பக்ச அரசு, கடன்­தொ­கையை 71வீத­மாக குறைந்­தி­ருந்­தது என­வும், இலங்கை சீனா­வின் கடன் பிடிக்­குள் மாட்­டிக் கொண்­டுள்­ளது என கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள இய­லாது என­வும் குறிப்­பிட்­டார்.

சீனா­வை­விட அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்தே
இலங்கை அதி­க­ளவு கடன் பெற்­றுள்ளது
இலங்கை சீனா­வை­விட அமெ­ரிக்­கா­வி­டம் இருந்­து­தான் அதி­க­மான நிதி­யைக் கட­னா­கப் பெற்­றுக்­கொண்­டுள்­ளது. ஆகவே இலங்கை அந்த நாடு­க­ளுக்­குத்­தான் அடி­மை­யா­குமே தவிர, சீனா­வுக்கு அல்ல என அவர் தொடர்ந்து கருத்­துத் தெரி­வித்­தார். ஐக்­கிய தேசி­யக் கட்சி பிணை­முறி மோச­டி­யூ­டாக பணம்­பெற்று தேர்­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டமை நிரூ­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், ஏன் அதைப்­பற்றி விசா­ரணை நடத்­தா­மல் இன்­னும் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக நிரூ­பிக்­கப்­ப­டாத குற்­றச்­சாட்­டி­னைப்­பற்றி விசா­ரிக்க முயல்­கி­றீர்­கள் என்ற கேள்­வி­யை­யும் அஜித் எழுப்­பி­யுள்­ளார்.

மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் பெறப்­பட்ட மொத்­தக் கடன்­தொகை டொலர் 26மில்­லி­யன் என­வும் இதில் சீனா­வி­ட­மி­ருந்து பெறப்­பட்­டது. 4அல்­லது 5பில்­லி­யன் டொலர்­கள் மட்­டுமே என்று கூறி­னார். மகிந்த ராஜ­பக்ச துறை­மு­கத்தை எந்த நாட்­டுக்­கும் விற்­கவோ அல்­லது ஒப்­பந்த அடிப்­ப­டை­யிலே கொடுக்­கவோ இல்லை என­வும் அதனை தற்­போ­தைய அரசே அப்­ப­டிச் செய்­துள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

சீன தூத­ர­கத்­தின் அர­சி­யல் பேச்­சா­ள­ரான லுவே சொங் இது­பற்­றிக் கூறு­கை­யில் இது முழு­மை­யான அர­சி­யல் பின்­னணி கொண்டதொன்று என­வும், இது முற்­றி­லும் பொய்­யா­ன­தொரு அறிக்கை என­வும் கூறி­யுள்­ளார். நியூ­யோர்க் பத்­தி­ரி­கை­யின் மகிந்த ராஜ­பக்­ச­விற்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கு இலங்­கை­யின் பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளும் கன்­ட­னம் தெரி­வித்­த­து­டன் அவர்­கள் போர்­மு­டி­வ­டைந்த பின்­னர் இலங்­கையை கட்டி எழுப்­பும் பணி­யில் சீன ஆற்­றும் பங்­க­ளிப்பை பாராட்­டி­யுள்­ள­தா­க­வும் லுவே சொங் குறிப்­பிட்­டார்.

எப்­ப­டி­யான தடங்­கல்­கள் உரு­வாக்­கப்­பட்­டா­லும், இரு­நாட்­டுத் தலை­வர்­க­ளா­லும் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்ள ஒப்­பந்­தங்­கள் சரி­யா­கவே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் என அவர் தெரி­வித்­தார்.

நியூ­யோர்க் பத்­தி­ரி­கை­யில் கூறப்­ப­டும் குற்­றச்­சாட்டு பற்றி மகிந்த ராஜ­பக்ச கருத்­துத் தெரி­விக்­கை­யில், இது தன்­னு­டைய பெய­ருக்கு களங்­கம் கற்­பிக்­கும் இலங்கை அர­சின் செயல்­பா­டு­கள் என்று கூறி­னார். விரை­வில் ஒரு தேர்­தல் வர­வி­ருப்­ப­தால் கடந்த 3வரு­டங்­க­ளா­கவே கூட்டு அரசு ராஜ­பக்­சக்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்டு வந்­துள்­ளது என­வும், ஐக்­கிய தேசிய அடுத்த தேர்­தல் வரும்­வரை இந்த நட­வ­டிக்­கை­களை தொட­ரப்­போ­கி­றது என்­றும் கூறிய அவர், தான், குறிப்­பிட்ட அந்த நியூ­யோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கைக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க உள்ள போதி­லும், மக்­கள் அந்த பத்­தி­ரிகை செய்­தியை நம்­ப­மாட்­டார்­கள் என­வும் கூறி­னார்.

இது­போன்ற நட­வ­டிக்­கை­க­ளின் ஊடாக இந்த அரசு மக்­களை முட்­டாள்­க­ளாக்க முனை­கி­றது என­வும், மக்­கள் அவற்றைக் கண்டு ஏமா­ற­மாட்­டார்­கள் என­வும், ‘‘ராஜ­பக்ச ஒரு ஊழல்­வாதி’’ என்ற சுலோ­கம் இனி­மே­லும் மக்­க­ளி­டையே எடு­ப­டாது என்­ப­து­டன், வர­வி­ருக்­கும் தேர்­தல் இதனை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எடுத்­துக் காட்­டும் என்­றார் மகிந்­த­ரா­ஜ­பக்ச.