வடக்கு மாகா­ண­ச­பை­யின் ஆயுட்­கா­லம் இன்­ன­மும் மூன்றே மாதங்­க­ளில் நிறை­வு­ பெ­ற­வுள்ள நிலை­யில், முன்­னாள் அமைச்­சர் ஒரு­வ­ரின் பதவி நீக்­கம் தொடர்­பான சர்ச்சை, அதன் நிர்­வா­கச் செயற்­பா­டு­களை முடக்கி வைத்­துள்­ளதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

நீதி­மன்­றத் தீர்ப்பை உதா­சீ­னம் செய்­யும் விதத்­தில் 
செயற்­ப­டும் முத­ல­மைச்சர்

இந்த விட­யத்­தில் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னின் செயற்­பா­டு­கள் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­வையாகத் தெரி­ய­வில்லை. நீதி­மன்­றத்­தின் தீர்ப்பை மதிக்க வேண்­டி­யது இலங்­கைப் பிர­சை­கள் அனை­வ­ர­தும் தலை­யாய கட­மை­யா­கும். முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னின் பதவி நீக்­கம் தொடர்­பாக விவா­தித்து ஒரு தீர்­வைக் காணும் பொருட்டு கூட்­டப்­ப­ட்ட சபை­யின் விசேட அமர்­வில் முத­ல­மைச்­ச­ரும், சக அமைச்­சர்­க­ளும் கலந்து கொள்­ளாது புறக்­க­ணித்­து­ விட்­ட­னர். இதன் உள்­நோக்­கம் என்­ன­வென்­பது மக்­க­ளுக்­குப் புரி­ய­வில்லை.

ஆனால் முத­ல­மைச்­சர் இந்த விசேட அமர்­வில் கலந்­து­கொண்டு தம­து­பக்க நியா­யங்­களை எடுத்­து­ரைத்­தி­ருக்க வேண்­டும் என்­பது பல­ர­தும் அபிப்­பி­ரா­ய­மா­கக் காணப்­ப­டு­கின்­றது. சபை­யில் விவா­தங்­கள் இடம்­பெ­றும்­போ­து­தான் ஒரு தீர்­வைக் காண­மு­டி­யும். அதை­வி­டுத்து விவா­தத்­தில் பங்­கு­கொள்­ளாது ஒதுங்கி நின்று கொண்டு தனிப்­பட்ட அறிக்­கை­களை வௌியி­டு­வ­தால் பய­னொன்­றும் கிடைக்­க­மாட்­டாது.

டெனீஸ்­வ­ரன் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­ட­மைக்கு நீதி­மன்­றம் இடைக்­கால உத்­த­ரவு பிறப்­பித்­த­வு­டன், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும், ஆளு­ந­ரும் ஒன்­றாக அமர்ந்து பேசி­,ஒரு தீர்­வைக் கண்­டி­ருக்க வேண்­டும். ஆனால், அவ்­வாறு எது­வுமே இங்கு இடம்­பெ­ற­வில்லை. இந்த விட­யம் தொடர்­பாக ஆளு­நர் எழு­திய கடி­தங்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் பதி­ல­ளிக்கவில்­லை­யென்றே கூறப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யில் பிரச்­சி­னைக்கு எவ்­வாறு தீர்­வைக் காண­மு­டி­யும்?

வட­மா­காண மக்­க­ளது  பல தேவை­கள் 
நிறை­வேற்­றப்­பட வேண்­டி­யவை

வடக்கு மாகா­ணத்­தில் சுமார் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மக்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இவர்­க­ளில் கணி­ச­மா­ன­வர்­கள் போரின் வலி­க­ளைத் தாங்கி நிற்­கின்­ற­னர். இவர்­க­ளின் பல தேவை­கள் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய நிலை­யில் உள்­ளன. மைய அரசு இதில் அக்­கறை காட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. மாகாண அர­சும் இவர்­க­ளைக் கைவிட்­டால் இவர்­கள் எங்­கு­தான் செல்­ல­மு­டி­யும்?

முன்­னாள் அமைச்­ச­ரான பசில் ராஜ­பக்ச கேலி­யா­கத் தெரி­வித்த விட­ய­மொன்று தமி­ழர்­கள் அனை­வ­ருக்­குமே தலைக்­கு­னி­வைத் தரக்­கூ­டி­யது. மகிந்த ராஜ­பக்­ச­வி­னால் அமைக்­கப்­பட்ட வடக்கு மாகா­ண­ச­பையைச் சரி­வர நடத்­த­மு­டி­யாத சம்­பந்­தன் போன்­ற­வர்­கள் எம்­மி­டம் குறை­க­ள் காண­முற்­ப­டு­வது கேலிக்­கூத்­தா­கு­மென அவர் கூறி­யி­ருந்­தார். ஆளத்­தெ­ரி­யா­த­வர்­கள் என்­ற­அ­வப்­பெ­ய­ரும் தமி­ழர்­க­ளுக்கு உள்­ளது. சேர, சோழ, பாண்­டி­யர்­கள் காலத்­தி­லேயே இந்த நிலை காணப்­பட்­டது. ஆயு­தப் போரின் போதும் தமிழ் இளை­ஞர்­கள் பல அணி­க­ளா­கப் பிரிந்து செயற்­பட்­ட­தன் விளைச்­ச­லைத்­தான் நாம் இன்று அறு­வடை செய்து கொண்­டி­ருக்­கின்­றோம். தற்­போது மாகா­ண­ச­பை­யைக்­கூட மக்­க­ளுக்­குப் பய­னுள்­ள­தாக்­கு­வ­தற்கு நாம் தவ­றி­விட்­டோம்.

மறுக்­கப்­பட்ட உரி­மை­க­ளை 
பெறப் போரா­டும் தமி­ழர் தரப்­புக்கள்

தமி­ழர்­கள் உரி­மை­கள் மறுக்­கப்­பட்ட நிலை­யில் இங்கு வாழ்­வது ஒன்­றும் புதிய விட­ய­மல்ல. அவர்­கள் தமது உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டு­வ­தும், இன­வா­தி­கள் அவர்­க­ளது உரி­மை­க­ளைத் தட்­டிப் பறிப்­ப­தும் வழ­மை­யான செயல்­க­ளா­கி­விட்­டன.

வடக்கு மாகா­ண­சபை கூட்­ட­மைப்­பின் கட்­டுப்­பாட்­டி­னுள் இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டா­லும், அதன் தோழ­மைக் கட்­சி­க­ளுக்­கி­டை­யில் ஐக்­கி­யத்­தைக் காண முடி­ய­வில்லை. ஆளுக்­கொரு பக்­க­மாக அறிக்கை விடு­வ­தி­லேயே இந்­தக் கட்­சி­கள் காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றன. டெனீஸ்­வ­ரன் விவ­கா­ரத்­தில் இந்­தக் கட்­சி­கள் ஒரு­பொ­து­வான தீர்­மா­ னத்தை மேற்­கொண்­டி­ருந்­தால், இன்று அதன் தாக்­கம் இந்­த­ அள­வுக்­குப் பெரி­தாக இருந்­தி­ருக்க மாட்­டாது. சர்­வ­மும் முத­ல­மைச்­சரே என்ற வகை­யில் செயற்­பட்­ட­தன் விளை­வு­கள்­தான் இன்று பூதா­கா­ர­மாக எழுந்து நிற்­கின்­றன.

தனது ஆயு­ளின் இறு­திக் கட்­டத்தை எட்டி நிற்­கும் வடக்கு மாகா­ண­சபை உருப்­ப­டி­யாக எதை­யுமே சாதித்­தா­கத் தெரி­ய­வில்லை. மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளின் நலன்­கள் தொடர்­பா­கக் காட்­டிய அக்­க­றையை, மக்­க­ளின் தேவை­கள் தொடர்­பா­கக் காட்­டி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­குச் சேவை­யாற்ற வேண்­டிய மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், தமக்­கான தீர்­வை­யற்ற வாகன அனு­ம­திப்­பத்­தி­ரத்­தைப் பெற்­றுப்­ப­ணம் சம்­பா­திப்­ப­தி­லேயே அதிக ஆர்­வத்­து­டன் செயற்­பட்­ட­தைக் காண­மு­டிந்­தது.

தற்­போது மாகா­ண­ச­பை­யின் செயற்­பா­டு­கள் முடங்­கிக் காணப்­ப­டு­கின்­றமை, வடக்கு மக்­க­ளுக்­குத்­தான் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­வி­டப் போகின்­றது. ஆனால் உரி­ய­வர்­கள் இதை உணர்ந்­து­கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. இதைப் பார்க்­கும்­போது மாகா­ண­ச­பை­யென ஒன்று வடக்கு மக்­க­ளுக்­குத் தேவை­தானா? என்ற கேள்­வி­தான் எழுந்து நிற்­கின்­றது.