நாட்டின் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் இடம்பெற்ற சமயவழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ´இலங்கை இராணுவம் முப்படையினர், பொலிஸார் ஆகியோருடன் இணைந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படுகின்றது.

ஜனாதிபதி ஒவ்வொரு வாரமும் பாதுகாப்பு சபையை கூட்டி நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்கின்றார்.

இதன் போது அனைத்து படை தளபதிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் நாட்டின் பாதுகாப்பு குறித்து எடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

இதேவேளை, இந்த மாதத்தின் 15 – 25 ஆம் திகதிக்குள் ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவினர்.

´இராணுவத்திற்குள் எடுக்கப்படும் பல நடவடிக்கைகள் குறித்து நாம் தெளிவுபடுத்துவோம்.

அவைகள் தொடர்பில் மக்களுக்கு எடுத்து காண்பிக்க நடவடிக்கை எடுப்போம். எந்த பிரச்சினை காணப்பட்டாலும் நாம் அதை திருட்டுத்தனமாக செய்வதில்லை.

மக்களுக்கு அறிவித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்´ என்றார்.