நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த வௌ்ள நீர் தற்போது வடிந்தோடிக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

எனினும் 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி கூறினார்.

தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட, அயகம, கிரிஉல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், காலி மாவட்டத்தின் நாகொடை பிரதேச செயலாளர் பிரிவிலும் களுத்துறை மாவட்டத்தின் பாலின்தனுவர, வலல்லாவிட மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.