மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக இன்று முதல் விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதும் இந்த விசேட சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.