பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1,271 பேரின் சாரதி அனுதிப்பத்திரங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் வீதி ஒழுங்குகளை மீறிய சாரதிகள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.