தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அடங்கமறு’.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அடங்க மறு’. அறிமுக இயக்குநரான கார்த்திக் தங்கவேலு இந்தப் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். மேலும் படத்தில் பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, ஸ்ரீரஞ்சனி, மீரா வாசுதேவன், ராம்தாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைத் தந்தது.

அடுத்ததாக ஜெயம் ரவி, ‘கோமாளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

மேலும் படத்தில் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, கோவை சரளா, பிரேம்ஜி அமரன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கிறார். படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இது ஜெயம் ரவியின் 24-வது படமாகும்.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி, அடுத்ததாக அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இயக்குனர் அகமது ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.