மன்னாரில் காணாமற்போன இரண்டு மீனவர்களின் சடலங்கள் யாழ். புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.

இன்று முற்பகல் 10 மணியளவில் சடலங்கள் கரையொதுங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

மன்னார் – ஊருமலை பகுதியில் கடந்த 6 நாட்களுக்கு முன்னர் கடற்றொழிலுக்கு சென்றிருந்த இரண்டு மீனவர்கள் காணாமற்போயிருந்தனர்.

அவர்களின் படகு நேற்று (12) கரையொதுங்கியதாக  கூறினார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்ரின் கூஞ்ஞ, எமல்ரன் கூஞ்ஞ ஆகிய இரண்டு சகோதரர்களே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.