மன்னார் நகர் நிருபர்

11.09.2010

மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினரால் பொது
மக்களுக்கு விழிப்புணர்வு சம்பந்தமான நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்
கிழமை (10.09.2019) மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட செயலாளர்
சீ.ஏ.மோகன்ராஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மன்னார் மாவட்ட செயலக மேலதிக
அரசாங்க அதிபர் எஸ் குணபாலனின் மேற்பார்வையில் மன்னார் மாவட்ட பாவனையாளர்
சபை அலுவலக பொறுப்பதிகாரி எம்.பி.எஸ்.கே.றெவலின் ஒழுங்கமைப்பின் கீழ் இவ்
நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட செயலக பிரதம கணக்காளர்
எம்.செல்வரட்ணம் கலந்து கொண்டு உரையாற்றினார். சிறப்பு அதிதிகளாக மன்னார்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன். அழகியற் கல்வி
உதவிப் பணிப்பாளர் பி.எம்.எம்.சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் விழப்புணர்வு கருத்தமர்வில் பலதரப்பட்ட திணைக்களங்ளைச்
சார்ந்தவர்கள், பொது மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இதில்
கலந்து கொண்டனர். அத்துடன் அதிகமான அரச அதிகாரிகளும் இதில் கலந்து
கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதாவது நாடு பூராகவும் உள்ள அனைவரும் பாவனையாளர் பாதுகாப்புச் சட்டத்தை
நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரையும் இதில் கலந்து
கொள்வதற்கான நடவடிக்கையாகவே இது மேற்கொள்ளப்பட்டு வருவதாக
தெரிவிக்கப்பட்டது.