ஜோசப் நயன்

FTP NAME-MANNAR HARD WAR FAIR 19-09-2019

-மன்னார் நகர் நிருபர்-

(19-09-2019)

மன்னார் உப்புக்குளம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடினப்பொருள் விற்பனை நிலையத்தில் (ஹாட்வெயார்) நேற்று புதன் கிழமை (18) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எறிந்து நாசமாகியுள்ளது.

-வழமை போல் குறித்த கடினப்பொருள் விற்பனை நிலையம் (ஹாட்வெயார்) நேற்று புதன் கிழமை (18) இரவு மூடப்பட்டது.
இந்த நிலையில் இரவு 11 மணியவில் குறித்த விற்பனை நிலையத்தின் உள் பகுதியூடாக தீப்பரவல் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் உள்ளவர்கள் தீயை அனைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு,மன்னார் பொலிஸ் மற்றும் நகர சபைக்கு அறிவித்தனர்.

எனினும் மன்னார் நகர சபை பௌசர் ஊடாக நீர் கொண்டு வந்து தீயை அனைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் அருகில் உள்ள வர்த்தக நிலையங்கள்,வீடுகளுக்கு தீ பரவாமல் அனைக்கப்பட்டது.

எனினும் குறித்த விற்பனை நிலையம் முழுமையாக எறிந்துள்ளது.பல இலட்சம் ரூபாய் பெறுமதியாக பொருட்கள் எறிந்துள்ளது.
தீ அணைப்பு வாகனம் இல்லாமையினால் குறித்த தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 3 இற்கும் மேற்பட்ட பாரிய தீ விபத்து இடம் பெற்ற போதும் தீ அணைப்பு வாகனம் இல்லாமையினால் தீ யை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

-எனவே மன்னார் மாவட்டத்திற்கு தீ அணைப்பு வாகனம் ஒன்றை பெற்றுக்கொள்ள அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.