மன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்

மன்னார் நகர் நிருபர்

26.03.2019

தமிழர் தாயக பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி
உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் அடைந்த ஒரு புதைகுழி சர்வதேச பிரதிநிதிகளையே நேரடியா பார்வையிட வைத்து தலையிடவைத்த மர்மபுதைகுழி என்று குறிப்பிடும் அளவிற்கு கொத்து கொத்தாய் கொன்று புதைக்கப்பட்ட ஒரு இடம்

பல்வேறு தரப்பினரின் பல்வேறு ஊகங்கள் எதிர்பார்ப்புக்கள் மத்தியில் 156 நாட்கள் தோண்டப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்ட மன்னார் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் மார்ச்(26) ஒருவருடம்

புதைகுழி அகழ்வுப்பணியானது சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் இடம் பெற்றாலும் அதன் ஆய்வுகள் அமேரிக்காவின் பீற்றா நிறுவன ஆய்வு கூடத்தில் இடம் பெற்றாலும் உண்மை நிலை கண்டறியப்பட்டதா என்பத்தே எல்லோரினதும் பொதுவான கேள்வியாகும்

கடந்த வருடம் மார்ச் 26 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தனியார் ஒருவரது வீட்டில் கொட்டப்பட்ட மன்னில் இருந்து சந்தேகத்திற்குபிடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டது இதனை தொடர்ந்து குறித்த வீட்டி உரிமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த மண் அகழப்பட்ட மன்னார் மத்திய பகுதியில் உள்ள சதோச வளாகமானது குற்றப்பிரதேசம நோக்கப்பட்டு
சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ் தலைமையில் நிபுணர்குழுவினர் குறித்த சதோச வளகத்தினை முழுமையாக ஆய்வு செய்ய தொடங்கினர்

இந்த நிலையில் 156 நாட்கள் அகழ்வு பணிகள் கடந்த நிலையில்

கடந்த மாதம் மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு மன்னார் மனித புதைகுழியில் இருந்து தெரிவு செய்யப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட 6 மனித எச்சங்களின் அறிக்கையும் சட்ட ரீதியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது

அவ் அறிக்கை ஒரு தரப்பினருக்கும் மகிழ்சியையும் என்னொரு தரப்பினருக்கு அதிர்சியையும் அளித்திருந்தது

ஆனாலும் அனேக தமிழ் தரப்பினர் மற்றும் அரசியல் வாதிகள் மற்றும் தமிழ் தொல்லியல் துறையினர் குறித்த அறிகையை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர் இவ் விடயம் இம் மாதம் இடம் பெற்ற ஐக்கிய நாடுகள் சபை அமர்விலும் கலந்து பேசப்பட்டது

ஏன் அவ் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காக தமிழ் தரப்புக்குகள் நடைமுறையான பல விடையங்களை மேற்கோள் காட்டியுள்ளனர்

அதே நேரத்தில் குறித்த புதைகுழியின் உண்மைனிலையை மழுங்கடிக்க பல்வேறு கதைகளும் கட்டவிழ்கப்பட்டுள்ளது

குறிப்பாக

அவ் புதைகுழி 1499-1799 என ஆய்வறிக்கையில் குறிப்பிட்டதன் அடிப்படையில் அவ் பகுதியில் போர்த்து கேயர் ஆட்சியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை யாழ்பாணத்தை ஆண்ட சங்கிளிய மன்னன் வெட்டி கொறதாக சிலர் குறிப்பிடுகின்றனர்

அதே நேரத்தில் பாராக்கிரம பாகு எனும் மன்னனுக்கும் குறிப்பிட்ட புதைகுழிக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது

ஆனால் மன்னர்களுக்கும் அவ் புதைகுழிக்கும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கபட்ட ஆண்டுகளின் படி நிச்சையம் தொடர்பு இருக்க முடியாது

1505 தொடக்கம் 1515 ஆண்டுகளுக்கு பிற்பகுதியிலேயே அனேக மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றம் பெற்றனர்

போர்துக்கேயர் மன்னார் பகுதிக்கு வருகை தந்ததும் மன்னாரில் சதோச வாளாகத்திற்கு அண்மையிலேயே தங்கள் பிரதான படை தலைமையகத்தயும் அதே நேரத்தில் பாதுகாப்பு அரணையும் கோட்டையையும் அமைத்தார்கள் சதோச வளாகத்தில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்திலே தான் போர்த்துகேயரில் பெரும் கோட்டை காணப்பட்டது

அவ்வாறான பேரும் பாதுகாப்பு பகுதியாக இருந்த இந்த மத்திய பகுதியில் ஆயுதங்களை பீரங்கிகலை வெடி பொருட்களை கொண்ட ஒரு போர்த்துகேய படையை மீறி அந்த பகுதியில் எந்த மன்னனாலும் இவ்வாறான கொலைகளை ஏன் உள் நுலைவையே மேற்கொள்ள முடியாது என்பதே உன்மையாகும்

அவ்வாறே ஒல்லாந்தர் காலத்திலும் ஆங்கிலேயர்காலத்திலும் கோட்டை பகுதி மிக பாதுகாப்பான பகுதியாகவே காணப்பட்டது

எனவே அரசர்கள்யாரும் இவ் கொலைகளை மேற்கொள்ள சாத்தியம் இல்லை என்பதே உசிதம் அதே நேரத்தில் குறித்த மனித புதைகுழிகளில் இருந்து முழு மனித எச்சங்களே மீட்கப்பட்டன அவற்றில் பெரிய அளவில் வாளால் வெட்டப்பட்ட தழும்புகலோ வெட்டப்பட்டு பகுதியாக மீட்கப்பட்ட மனித உடல் எலும்புகள் எவையும் மீட்கப்படவில்லை

அதே நேரத்தில் குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதி உப்பு தன்மை உள்ள பகுதி என்பதனால் தான் 500 வருடங்களுக்கு மேலாக குறித்த மனித எச்சங்கள் உக்காமல் இருப்பதாக சிலர் வியாக்கியானம் செய்கின்றனர் ஆனால் உண்மை அது இல்லை

மன்னார் மனித புதை குழியில் இரு வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டது

மத்திய பகுதி

மத்திய பகுதி கடல் மட்டத்திற்கு கீழ் அதிகளவிலான உப்புத்தன்மையான நிலம் காணப்பட்ட பகுதியில் சில முழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது ஆனாலும் அவ் மனித்க எச்சங்கள் மிகவும் சிதைவடைந்து காணப்பட்டது ஆனாலும் அவை ஒழுங்காக புதைக்கப்பட்டு எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமாக காணப்படமையினால் அவ மேலதிகமாக தோண்டப்படவில்லை(புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)

நுழைவு பகுதி

ஆனாலும் சதோச வளாகத்தின் நுழைவு பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் கடல் மட்டத்திற்கு மேலும் உப்புத்தன்மை குறைவாகவும் உள்ள பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டது ஆனாலும் அங்கு காணப்பட்ட மனித எச்சங்கள் சிதைவடையாமல் காணப்பட்டது அதே நேரத்தில் அவசர அவசரமாக புதைக்கப்பட்ட விதமகவும் ஒன்றுடன் ஒன்று செருகிய நிலையிலும் கை கால் கள் கட்டப்பட்ட நிலையிலும் இரும்பு சங்கிலியுடன் பிணைத்தவாரும் மீட்கப்பட்டது

அதன் அடிப்படையிலேயே நுழைவு பகுதியில் உள்ள மனித எச்சங்கள் அனைத்தும் ஆலமாகவும் அகழமாகவும் அகழ்வு செய்யப்பட்டன

எனவே கடல் மட்டத்திற்கு கீழ் இருந்த மனித எச்சம் அதிகம் உக்கியும் கடல் மட்டத்திற்கு மேல் இருந்த மனித எச்சம் உக்காமலும் காணப்பட்டது எனவே நுழைவு பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 500 வருடங்களுக்கு முற்பட்டவை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மைக்கு புறம்பான கருத்தாகும்

அதே நேரத்தில் ஆய்வு அறிக்கை வரும் முன்னர் சட்ட வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில் குறித்த ஆய்வு அறிக்கையின் அடைப்படையில் ஆய்வு முடிவுகள் 10 ஆண்டுகள் இடைவெளியில் காணப்படும் என தெரிவித்திருந்தார்

ஆனால் ஆய்வறிக்கையில் 30-40 வருட இடைவெளியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது ஆனாலும் ஆய்வுகளுக்கு அனுப்ப பட்ட எச்ச மாதிரிகளி அறிக்கை 100-300 மேற்பட்ட ஆண்டு இடைவெளியை காட்டி நிற்கின்றது எனவே அறிக்கை முன்னுக்கு பின் முரணான தன்மையை காட்டி நிற்கின்றது

அதே நேரத்தில் குறித்த மனித் புதைகுழி மனித எச்சங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே சம்பவத்துடன் புதைக்கப்பட்டவை என அவ் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விதம் ஒவ்வொன்றுடன் ஒவ்வொன்று கோக்கப்பட்ட விதம் ஒன்றுக்குல் ஒன்று செருகி காணப்படும் நிலையை வைத்து அறிய முடிகின்றது ஆனாலும் அவ் ஆய்வறிக்கையின் படி ஒவ்வொறு மனித எச்சங்களும் ஒவ்வொறு வித்தியாசமான காலப்பகுதியை தசாப்தங்களை நூற்றாண்டுகளில் புதைக்கப்பட்டவை என காட்டி நிற்கின்றன எனவே இவ் ஆய்வறிக்கை குறைபாடுள்ள ஆய்வறிக்கையாகவே காணப்படுகின்றது

அதே நேரத்தில் குறித்த மனித எச்ச மாதிரிகளின் பகுப்பாய்வு அறிக்கை எவ்வளவு முக்கியமோ அவ்வாரே அவ் நிலம் சார்ந்த மண்ணின் தன்மை தொடர்பான அறிக்கை அங்கு மீட்கப்பட்ட இதர ஆதார பொருட்களில் அறிக்கைகள் மனித எச்சங்களில் இருந்து மீட்கப்பட்ட மோதிரம் போன்ற காப்பு போன்றவ்பொருட்கள் அதே நேரத்தில் அங்கு மீட்கப்பட்ட இரும்பு சங்கிலி சங்குகள் சிற்பிகள் என அனைத்தின் ஆய்வறிக்கைகளின் அடிபடையிலேயே உன்மைனிலையை கண்டறிய முடியும் என சட்டத்தரணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்

அதே நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மனித புதைகுழி தொடர்பாக இடம் பெற்ற கூட்டத்தின் போது காபன் அறிக்கையை மாத்திரம் வைத்து தீர்மானத்திற்கு வர முடியாது என தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் ஏனைய அறிக்கைகளை கோரி அதன் அடிப்படையில் தீர்மானம் எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது அத்தோடு இந்த வாரம் முழுவதும் மன்னார் மனித புதைகுழி வளகத்தில் ஆய்வறிக்கைகளை தயாரிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன

அவ் ஆய்வு அறிக்கையானது நீதி மன்றத்திற்கு கிடைக்க மூன்று மாத காலம் தேவைப்படும் என்பதன் அடைப்படையில்
மூன்று மாத காலம் மன்னார் மனித புதைகுழி மனித எச்ச அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது

எது எவ்வாறோ
மன்னார் மனித புதைகுழியி மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய கொலை இடம் பெற்றுள்ளது அதன் உண்மை நிலை அறியாது குறைபாடுகள் நிறைந்த ஒரு அறிக்கையினை கொண்டு அவ் புதைகுழி அகழ்வு பணியை நிறுத்துவது யாராலும் எற்றுக்கொள்ள முடியாத முடிவாகும்

ஆனாலும் ஏனைய அறிக்கைகளாவது உண்மையை வெளிப்படுத்துமா என்ற காத்திருப்பில் தமிழர் தரப்புகள் காத்திருப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது

ஜோசப் நயன்