கோவையில் மரத்தால் செய்யப்பட்ட புதுவிதமான சைக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது.

கோவையை அடுத்த இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து வீட்டு உள் அலங்காரப் பணிகளைச் செய்து வருகிறார்.

தன் பழைய சைக்கிளை புதுப்பிக்க ஆசைப்பட்ட இவர் மரத்தைக் கொண்டு சில பாகங்களை இணைத்து உள்ளார். தொடர்ந்து புதிய வடிவமைப்பில் சைக்கிளை தயாரிக்க திட்டமிட்ட்டுள்ளார்.

‘Weather coating’ கொடுக்கப்பட்ட பிளைவுட்டை மூலம் இந்த சைக்கிளை உருவாக்கியுள்ளார். இதில், ஃப்ரேம், டிசைன், அலாய் என 90 சதவிகிதம் மரத்தாலேயே செய்யப்பட்டுள்ளது.

‘ஹைப்ரிட் பைக்’ என்று அதற்கு புதிய பெயரும் வைத்துள்ளார். ஏழு கியர் கொண்ட இதன் எடை மிகவும் குறைவு. இருக்கையின் உயரத்தை கூட்டிக்குறைக்கலாம். சக்கரங்களை எளிதில் கழற்றி மாட்டலாம்.

இந்த சைக்கிளை உருவாக்க முருகேசனுடன் அவரது நண்பர் தமிழ்செல்வனும் துணை நின்றிருக்கிறார். சாலைகளில் மட்டுமல்லாமல் மலையேற்றத்துக்கும் இந்த சைக்கிள் ஏற்றது என்று இருவரும் கூறுகின்றனர்.