பாலியல் மற்றும் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அன்வர் மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் எதிர்த்து வந்தனர்.

அன்வார் இப்ராஹிமிற்கு பொது மன்னிப்பு வழங்கும்படி, மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கோரியிருந்தார். பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து, இப்ராஹிம் இன்று விடுவிக்கப்பட்டார்.

தற்போது பிரதமர் பதவியை ஏற்றுள்ள மகாதீர் முகமது, இரண்டு வருட காலத்திற்குள் பிரதமர் பதவியை அன்வார் இப்ராஹிமிற்கு விட்டுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.