சவால்களை போன்று வடமேல் மாகாணத்திலுள்ள தோட்ட தொழிலாளர்களும் அனுபவித்து வருகின்றனர்.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் வாழும் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட தமக்கு கிடைப்பதில்லையென அம்மக்கள் அங்கலாய்கின்றனர்.

குருநாகல் மாவட்டத்தில் தோட்ட் தொழிலாளர்கள் இருக்கின்றார்களா என்பது கூட எவருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டு உரிமையோ காணி உரிமையோ தமக்கு வழங்கப்படவில்லையென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 12 அடி லயன் காப்பராக்களில் பிள்ளை குட்டிகளுடன் துயர வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தமது எதிர்கால சந்ததியினரின் நிலை என்னவாகுமோ என அம்மக்கள் ஏங்கி தவிக்கின்றனர்.

மலையக மக்களுககு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் உரிமைகளை குருநாகல் மாவட்டத்தில் வாழும் தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டுமென பத்தலகொட தோட்டத்திலுள்ள மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

போக்குவரத்து பிரசசினைகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதில் காணப்படும் இடையூறுகள் பற்றி பலமுறை அதிகாரிகளை அறிவுறுத்திய போதும் இதுவரை எந்தவொரு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.