செய்திகள் விளையாட்டு

மழையால் பாதிப்பு- முதலாவது ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது

841

இலங்கை  இங்கிலாந்து அணிகளிற்கு இடையில் இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாட  பணித்தது.

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக  முதலில் பந்து வீசுபவர்களிற்கு வாய்ப்புகள் அதிகம் என கருதியே பந்துவீச தீர்மானித்தாக இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்தார்.

எனினும் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் எவ்வித சிரமமும் இன்றி இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களை  எதிர்கொண்டனர்

இங்கிலாந்து அணி 49 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை பைஸ்டிரோ நுவான் பிரதீப்பின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு சில நிமிடங்களின் பின்னர்ஜேசன் ரோயும் ஆட்டமிழந்தார். எனினும் ரூட் மோர்கன் இருவரும் தொடர்ந்தும் ஓட்டங்களை வேகமாக குவித்தனர்.

இங்கிலாந்து அணி 15 ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது.

இதன் பின்னர் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை.

மழை மற்றும் அதனால் மைதானத்தில் காணப்பட்ட ஈரநிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

ஆட்டத்தை கைவிட்டது சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் மோர்கன் வீரர்களின் பாதுகாப்பே முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.