இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அணிகள் தகுதி பெற்றது.

இதில் மான்செஸ்டரில் நடக்கும் முதல் அரையிறுதியில், இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

மழை குறுக்கீடு:
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, பும்ரா அசுர வேகத்தில் சிக்கி சின்னாபின்னமானது. இதற்கிடையில் நியூசிலாந்து அணி 46.1 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட்டதால், 2 மணி நேரத்துக்கு மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாளை தொடரும்:
தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்வதால், போட்டி ரிசர்வ் நாளான நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இப்போட்டியில் படைக்கப்பட்ட சில சாதனைகள்.

இப்போட்டியில் 1 மெய்டின் ஓவர் வீசிய பும்ரா, இந்த உலகக்கோப்பையில் அதிக மெய்டின் ஓவர்கள் வீசிய பவுலர்கள் பட்டியலில் ‘நம்பர்-1’ இடம் பிடித்தார்.

இந்த உலககோப்பையில் அதிக மெய்டின் ஓவர்கள் வீசிய பவுலர்கள்:
பும்ரா (இந்தியா) – 9 ஓவர்கள்
ஆர்ச்சர் (இங்கிலாந்து) – 8 ஓவர்கள்
கம்மின்ஸ், வோக்ஸ் – 6 ஓவர்கள்
அமீர், மோரிஸ், ஸ்டார்க் – 5 ஓவர்கள்

கப்டில் மோசம்:
இப்போட்டியில் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டான நியூசிலாந்து வீரர் கப்டில் (5 முறை), ஒரே உலககோப்பை தொடரில் அதிகமுறை ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டான வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். இப்பட்டியலில் ஆஸ்லே (6 முறை, 1999) முதலிடத்தில் உள்ளார்.

இப்போட்டியில் 67 ரன்கள் எடுத்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், உலகக்கோப்பை அரங்கில் அதிகரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றார்.