மார்க்கம் அருகே ரயில் மோதியதில் ரயில்வே ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

போர்ட் டல்போட் பார்க்வே மற்றும் பிரிட்ஜெண்ட் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்தை தொடர்ந்து வேல்ஸிற்கான அனைத்து ரயில் போக்குவரத்துக்களும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்து இடம்பெற்ற ரயில் நிலையங்கள் ஊடான சேவைகள் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள ரயில் பாதைகள் ஊடான போக்குவரத்துக்கள் பிற்பகல் 2 மணி வரை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.