என்ன சுத்தமான தண்ணீர் குடித்தாலும் திருப்தியாகவே இருக்காது. அந்த சமயத்தில் வேறு வழியின்றி நம்முடைய நாவும் வெந்நீரைத் தேடும்.

குளிர் மற்றும் மழைக்காலங்களில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தொண்டையில் வறட்சி அதிகமாகிக் கொண்டே போகும். அதுபோன்ற சமயங்களில் தாகத்துக்கு சுடு தண்ணீர் குடிப்பதா? சாதாரண தண்ணீர் குடிப்பதா அல்லது இவற்றால் தொற்று வரலாம் என சந்தேகித்து மினரல் வாட்டர் குடிப்பதா என நாம் குழம்புவதுண்டு. அதுபற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

நம்முடைய உடலுக்குத் தேவையான மினரல்கள், தாது உப்புகள், சுத்திகரிக்கப்பட்ட உப்புகள் ஆகியவை சேர்க்கப்பட்ட மினரல் வாட்டரை நாம் சுட வைத்துக் குடித்தோமானால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். அப்போ உண்மை தான் என்ன?

பொதுவாக நாம் வெளியில் தண்ணீர் வாங்கித் தான் குடித்துக் கொண்டிருக்கும். அவ்வாறு வாங்கும்போது சில குறிப்பிட்ட பிராண்டுகளைத் தவிர மற்றவையெல்லாம் ஆர்.ஓ. ட்ரீட் செய்யப்பட்ட தண்ணீர் தான். இதை சிலர் நம்முடைய வீடுகளிலேயே சில ஆயிரங்கள் செலவு செய்து பொருத்திக் கொள்கிறோம். அதாவது நாம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தான் குடிப்பதற்கானப் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருக்கின்ற அளவுக்கு அதிகமான பாஸ்பரஸ் போன்ற உப்புகள் சுத்திகரிக்கப் படுகிற பொழுது வெளியேறிவிடும். அதைத் தவிர மற்றபடி எந்தவித சத்துக்களும் வெளியேறாது. பாஸ்பரஸ் வெளியேறியதும் இதுவும் குடிப்பதற்கு ஏற்ற சாதாரண குடிநீர் போன்றது தான். அதனால் சாதாரண நீரை சுட வைப்பது போன்றே இந்த நீரையும் சுட வைக்கலாம். இதனால் எந்தவித சத்துக்களும் வெளியேறாது.

வாட்டர் கேனையோ அல்லது மினரல் வாட்டர் பாட்டில்களையோ ஒருமுறை திறந்து விட்டீர்கள் என்றால் அதை 24 மணி நேரத்துக்குள்ளாக பயன்படுத்தி விட வேண்டியது நல்லது. இல்லையென்றால் இதில் பாக்டீரியாக்கள் பெருகத் தொடங்கிவிடும். அதற்காகத் தான் மினரல் வாட்டர் பாட்டில்களைக் கூட மறுமுறை குடித்துவிட்டு தூக்கிவீசி விட வேண்டும் அதை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்வார்கள்.