மின்சக்தி திருத்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், அந்த சட்டமூலம் மீளப்பெறப்பட்டு சபை நடவடிக்கைகள் நாளை (07) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இது அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டதாக சபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது குறித்து இன்று காலை வேளையிலேயே தமக்கு தெரியவந்ததாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, இதனால் இதனை மீளப்பெறுவதற்கு தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளது.