தனுஷின் மாரி 2 பட ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள மாரி 2 படம் வரும் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை தயாரிப்பாளர் தனுஷ் இன்று வெளியிட்டுள்ளார்.

ட்ரெய்லரில் மாரியை கொலை செய்வது நடக்கவே நடக்காத காரியம் என்று வில்லன் டொவினோ தாமஸ் சொல்கிறார். தனுஷோ நான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன், if you are bad i am your dad, செஞ்சுருவேன் என்று மூன்று பஞ்ச் விட்டுள்ளார். சாய் பல்லவி மாரியை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக வந்துள்ளார்

ட்ரெய்லரை பார்த்தால் சாய் பல்லவி தனுஷை காதலித்து கல்யாணம் செய்வதை குறிக்கோளாக வைத்திருக்கும் பெண்ணாக உள்ளார். வரலட்சுமியின் கெத்தை பார்த்தால் சர்காரை போன்று இந்த படத்திலும் ஸ்கோர் பண்ணுவார் என்று தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மிரட்டலாக உள்ளது.

தனுஷ் சிக்ஸ் பேக்கில் வருவது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. படத்திற்காக மரண வெயிட்டிங்கில் உள்ளனர் அவர்கள்.