மன்னார் முதல் கொழும்பு வரையிலும், காலி, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடல் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களுக்கு நாளை  பிற்பகல் 01.30 மணி வரை மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்குமாறும் கடற்றொழில் மற்றும் கடல் சமுத்திர மீன்பிடி திணைக்களம்  கோரியுள்ளது.

கடல் பிரதேசங்களில் கடுமையான மழை, இடி மின்னல் தாக்கம் என்பன அதிகமாக இருக்கும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மழையுடன் காற்றின் வேகமும் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை காணப்படும் எனவும் இதனால் கடல் அலை வேகம் அதிகமாக காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.