இதய நோய்கள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் முதலில் நாம் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். ஏனெனில் உணவிற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நிறையவே தொடர்பு உள்ளது. இப்பொழுது எல்லாம் 25 வயது இளைஞர்களுக்கு கூட ஹார்ட் அட்டாக் வந்து விடுகிறது. காரணம் நாம் உண்ணும் உணவுப் பழக்கம் தான். இந்த சின்ன வயசிலே அதிக கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது இதயத்தை பாழாக்கி விடுகிறது என்று டாக்டர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அதிலும் நீங்கள் ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்த நபர் என்றால் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உணவை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். powered by Rubicon Project நீங்கள் உண்ணும் உணவே போதும் திரும்பவும் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க முடியும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று அறிவியல் பூர்வமாக அவர்கள் நிரூபித்துள்ளனர்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் மற்றும் ஐரோப்பிய கார்டியாலஜிசியின் அமைப்பு கருத்துப்படி நிறைய பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. சேச்சுரேட்டேடு கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் வேண்டாம் என்கின்றனர். அதே மாதிரி வாரத்தில் இரண்டு நாட்களாவது மீன்கள் சாப்பிடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

இது மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மக்களால் பின்பற்றி வரும் உணவு முறையாகும். இதில் நிறைய பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பயிறு, நட்ஸ், முழு தானியங்கள இவற்றுடன் கொஞ்சமாக சீஸ், முட்டை, யோகார்ட் சேர்த்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் மறக்காமல் இவர்கள் கடல் வகை உணவுகளை சாப்பிடுகிறார்கள். மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் காய்கறிகளை வதக்க செய்ய ஆலிவ்(மோனோசேச்சுரேட் கொழுப்பு) ஆயிலை மட்டும் பயன்படுத்துகின்றனர். இதனுடன் ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் ரெட் வொயின் எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கம் ஹார்ட் அட்டாக்கை தடுக்கிறது என்று புதிய சான்றுகள் தெரிவிக்கின்றன. அதே மாதிரி ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்த நபர்கள் கூட இதை எடுத்துக் கொண்டு வந்தால் மறுபடியும் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டாம். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் (பிரட், பாஸ்தா), ஒர் கைப்பிடியளவு நட்ஸ் என்று சாப்பிடுங்கள். வெண்ணெய் போன்றவற்றை தவிர்த்து ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளுங்கள். சிவப்பு இறைச்சி வேண்டாம் அல்லது மாதத்திற்கு இரண்டு முறை போதும் வாரத்திற்கு இரண்டு முறையாவது மீன்கள், கோழி சாப்பிடுங்கள் இரவு டின்னரின் போது ஒரு கிளாஸ் ரெட் வொயின் சாப்பிடுங்கள். இந்த உணவு முறையை பின்பற்றி வருவதால் தான் மத்திய தரைக்கடல் பகுதி மக்களுக்கு ஹார்ட் அட்டாக் அபாயம் இருப்பதில்லை. நாமும் இதைப் பின்பற்றி நலமுடன் வாழ்வோம்.