தேசியத் தலைலரின் சிந்தனையை நினைவில் தாங்கி தொடர்கிறது அடையாள உண்ணாவிரதம்!

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப்
படைப்பார்கள்” என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனையுடன் தொடர்கிறது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 4ம் நாள் அடையாள உண்ணாவிரதம்.

14.05.2019 செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது ஈகைச்சுடரினை திரு விஜயகுமார்
அவர்கள் ஏற்றிவைத்தார் தொடர்ந்து முள்ளிவாய்க்காலிலே கொல்லப்பட்ட எம் சொந்தங்களுக்காய் மலர் வணக்கம் செய்யப்பட்டு,அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இன்றைய நாளில் நாதன், துஷாந்தன், சுஜீவன், கௌரீசன், சிவானுஜன்,தனுசாந்த், சயந்தகுமார், கஜன், சயன், தினேஷ் கிருபாகரன் சர்வான்.
இன்றைய 4ம் நாள் அடையாள உண்ணாவிரதம் ஆரம்பமாகியது.