நியூ யார்க் நகரில் நடைபெற்ற சர்ஃபேஸ் 2019 வன்பொருள் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் லேப்டாப் 3, சர்ஃபேஸ் ப்ரோ 7, சர்ஃபேஸ் ப்ரோ எக்ஸ், சர்ஃபேஸ் நியோ மற்றும் இதர சாதனங்களை அறிமுகம் செய்தது. ஏற்கன வெளியான தகவல்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை உண்மையாக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் தனது சர்ஃபேஸ் இயர்பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் சாதனத்தில் இன்டியூட்டிவ் டச், வாய்ஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அசைவுகளை கொண்டு இயங்கும் ஜெஸ்ட்யூர் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் சிறப்பம்சங்கள்:

– 25 x 19 எம்.எம்.; எடை: 7.2 கிராம் (ஒரு இயர்பட்)
– 13.6 எம்.எம். டிரைவர்
– 20 –20 kHz ஃபிரீக்வன்சி
– ஒரு இயர்பட்-இல் இரண்டு மைக்ரோபோன்கள்
– டச், டேப், ஸ்வைப், வாய்ஸ் கண்ட்ரோல்
– ஆஃபிஸ் 365 வசதி
– அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கான பேட்டரி
– யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் போர்ட்
– விண்டோஸ் 10, ஆண்ட்ராய்டு 4.4, ஐ.ஒ.எஸ். 9

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் விலை 249 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 17,730) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.