ஆட்சி மாற்றம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மஹிந்த தரப்புடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

சதித் திட்டம் தீட்டப்பட்டு சுமார் நான்கு மாதங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டதாக இந்திய ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தொடர்ந்து 4 மாதங்கள் ஆட்சி மாற்றம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா ஊடகம் ஒன்றில்பணியாற்றும் ஊடகவியலாளர் ஸ்ரீனிவாசன் ஜயின், நாமல் ராஜபக்சவை சுட்டிக்காட்டி டுவிட்டரில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.