யாழ் குடா­நாட்­டில் இடம்­பெ­று­கின்ற வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பல பொலிஸ் குழுக்­கள் களத்­தில் இறக்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பிந்­திய தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அண்­மைக்­கா­ல­மாக குடா­நாட்­டில் இடம்­பெற்­று­வ­ரும் சம்­ப­வங்­கள் மக்­க­ளைப் பெரும் பீதி­யில் ஆழ்த்­தி­யுள்­ள­தோடு அவர்­க­ளின் இருப்­பை­யும் கேள்­விக்­கு­றி­யாக மாற்­றி­விட்­டன. வாள்­வெட்­டுக் குழுக்­கள் எவ­ருக்­கும் அஞ்­சாது சுதந்­தி­ர­மாக நட­மா­டித் தமது அடா­வ­டித்­த­னங்­க­ளைத் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­வது குறித்து குடா­நாட்டு மக்­கள் மத்­தி­யில் பல்­வேறு வகைப்­பட்ட சந்­தே­கங்­கள் நில­வு­கின்­றன. பண­மி­ருந்­தால் எதை­யும் சாதித்­து­வி­ட­லா­மென்ற நினைப்­பு­டன் சிலர் செயற்­ப­டு­வ­தா­கவே எண்­ணத் தோன்­று­கின்­றது.

இதை­வி­டத் தின­மும் திருட்­டுக்­க­ ளுக்­கும் கொள்­ளை­க­ளுக்­கும் இங்கு குறை­வில்லை. வீதி­க­ளில் செல்­கின்ற பெண்­க­ளின் நகை­கள் மற்­றும் உட­மை­கள் அப­க­ரித்­துச் செல்­லப்­ப­டு­கின்­றமை ஒரு தொடர் வழக்­க­மா­கவே மாறி­விட்­டது. இத­னால் வௌியில் செல்­வ­தற்கு மக்­கள் அச்­சப்­ப­டு­கின்ற நிலை­யும் உரு­வா­கி­யுள்­ளது. சுருக்­க­மா­கக் கூறி­னால் மக்­கள் அமை­தி­யி­ழந்து, தூக்­கத்தை மறந்து வெகு­நா­ளா­கி­விட்­டது என்றே கூற வேண்­டும்.

முற்­று­மு­ழு­தா­கக்  குற்றம் இடம்­பெ­றாத நாடு எது­வும் உல­கில் இருக்க இய­லாது

ஒரு நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில், ஆங்­காங்கே குற்­றச் செயல்­கள் இடம்­பெ­று­வது வழ­மை­யான விட­யம்­தான். ஆனால் நாட்­டின் ஒரு பகு­தி­யில் மட்­டுமே குற்­றச்­செ­யல்­கள் தாரா­ள­மாக இடம்­பெ­று­வதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. யாழ் குடா­நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் மக்­க­ளின் தேவைக்­கேற்ப பல பகு­தி­க­ளில் பொலிஸ் நிலை­யங்­கள் அமைந்­துள்­ளன. இரா­ணுவ முகாம்­க­ ளும்  அதி­க­ள­வில் காணப்­ப­டு­கின்­றன. இந்த நிலை­யில் அடா­வ­டிக் குழுக்­கள் சுதந்­தி­ ர­மா­கச் செயற்­ப­டு­வதை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள முடி­யும்? அதி­கா­ரங்­கள் எவை­யுமே இல்­லாத மாகாண அர­சொன்று வடக்­கில் இயங்கி வரு­கின்ற நிலை­யில், கொழும்பு அரசு வட­ப­கு­தி­யின் பாது­காப்பை உறு­தி­செய்ய வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

தமிழ்­மக்­க­ளது அமை­தி­யை­யும் பாது­காப்­பை­யும் கொழும்பு அரசு உறுதி செய்ய வேண்­டும்

போரி­னால் மிக­வும் மோச­மாய்ப் பாதிக்­கப்­பட்ட ஒரு பிர­தே­சத்­தில் வாழ்­கின்ற மக்­கள் மத்­தி­யில் அமை­தி­யை­யும், பாது­காப்­பை­யும் உறுதி செய்­வ­தில் மைய அரசு அச­மந்­த­மாக இருப்­ப­தும் ஏற்­கத்­தக்­க­தல்ல.

வடக்­கில் வன்­செ­யல்­கள் அதி­க­ரிக்­கும்­போது மைய அரசு விழித்­துக்­கொள்­வ­தும், பொலிஸ் விசேட, குழுக்­கள் சில­வற்றை அவ்­வப்­போது அனுப்பி வைப்­ப­தும் வாடிக்­கை­யாக மாறி­விட்­டது.

அப்­போ­தெல்­லாம் குற்­ற­வா­ளி­கள் அடங்கி இருப்­ப­தைப்­போன்­ற­தொரு தோற்­றம் இங்கு உரு­வா­கும். சில நாள்­க­ளில் எல்­லாமே பழைய நிலைக்­குத் திரும்­பி­வி­டும்.

தற்­போ­து­கூட விசேட பொலிஸ் குழுக்­கள் களத்­தில் இறக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னால், எதிர்­பார்க்­கப்­ப­டும்  நிரந்­த­ர­மான தீர்வு கிடைக்­குமா என்­ப­தைக் கூற முடி­யா­துள்­ளது. வன்­செ­யல்­தா­ரி­கள் முற்­றா­கக் கைது செய்­யப்­ப­டும் வரை­யில் இங்கு அமை­தி­யைப் பூர­ண­மாக எதிர்­பார்க்க முடி­யாது. பொலி­சார் அர்ப்­ப­ணிப்­பு­ட­னும், விழிப்­பா­க­வும் செயற்­பட்­டால் குடா­நாட்­டின் குற்­றங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது அவர்­க­ளுக்­கும் பெரிய விட­ய­மாக இருக்­காது.

இளை­ஞர்­க­ளது அடா­வ­டித்­த­னங்­க­ளால் ஒட்­டு­மொத்த தமிழ்ச் சமூ­கத்­துக்­கும் பாதிப்பு

இள­வ­ய­தி­னர் அடா­வ­டித்தனங்­க­ளில் ஈடு­ப­டு­வது ஒட்­டு­மொத்த குடா­நாட்­டுச் சமூ­கத்­தை­யும் பாதித்­து­வி­டும். இத­னால் எதிர்­கா­லத்­தில் நல்­ல­தொரு சமு­தா­யத்தை இங்கு எதிர்­பார்க்­க­வும் முடி­யாது போய்­வி­டும். இதைக் குடா­நாட்­டின் கல்­வி­மான்­க­ளும், அர­சி­யல்­வா­தி­க­ளும் புரிந்­து­கொள்ள வேண்­டும். ஆகவே இளை­ஞர்­கள் வழி தவ­றிச் செல்­வ­தைத் தடுப்­ப­தற்­கு­ரிய வியூ­கங்­களை வகுத்­துச் செயற்­பட வேண்­டிய கட்­டாய நிலை­யொன்று இங்கு இருப்­பதை உணர்ந்து செயற்­ப­டும்­போ­து­தான் இதை ஓர­ள­வுக்­கா­வது முளை­யில் கிள்­ளி­யெ­றிய முடி­யும். இதற்கு அர­சின் ஒத்­து­ழைப்பு பூர­ண­மா­கக் கிடைக்­க­வேண்­டும். அதை­வி­டுத்து இனி­மே­லும் வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருந்­தால் நிலைமை எல்­லை­மீ­றிச் சென்­று­வி­டும்.

தமி­ழர்­க­ளா­கப் பிறந்­த­துக்­காக அந்த இனத்­தைச் சேர்ந்த மக்­க­ளைப் பெரும்­பான்­மைச் சமூ­கம் பல வகை­யி­லும் புறக்­க­ணித்து ஒதுக்­கி­வி­டு­வது எந்த வகை­யி­லும் நியா­ய­மா­காது. இவ்­வாறு தொடர்ந்து செயற்­ப­டு­வ­தன் விளை­வு­கள் முழு­நாட்­டுக்­கும் பாத­க­மாக அமைந்­தா­லும் அதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை.