இந்த காலத்தில் ஒரு சிறுவன் ஆண்டுக்கு அதுவும் ரூ.155 கோடி சம்பாதிக்கின்றார். நம் இதை நம்பாமல் போனால் நாம் தான் உலகத்தில் முதல் முட்டாள்.

நவீன உலகம், சூப்பர் ஹைவே ( அதிவேக தொழில்நுட்ப தகவல் தொடர்பு) காலத்தில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அன்றாடம் நிகழ்ச்சிகளையும், பொழுது போக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் யூடியூப்களில் கண்டு கழிக்கின்றோம்.

யூடியூப்களில் இன்று நாம் தேடும் அனைத்தும் அணு ஆயுதங்கள் தயாரிப்பு முதல் நவீன ரக ஆயுதங்கள் தயாரிப்பு வரை நாம் யூடியூப்களில் இருந்து நாம் கண்டு எவ்வாறு செய்ய முடியும். அந்தக் காணொலியை பார்த்தும் அறிந்து கொள்ளலாம்.

யூடியூப் வீடியோ சேனல் ஆரம்பித்து வீடியோ அப்போடு செய்யும் முன் வங்கி கணக்கு கேட்கப்படும். இதன் பிறகு சேலை ஒப்பன் செய்து, அதில் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால், அந்த வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுமானால் ஒரு குறிப்பிட்ட தொகை நமது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

யுடியூப்பில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விமர்சனம் செய்யும் 8 வயது சிறுவன், ஆண்டுக்கு 155 கோடி ரூபாய் வருமானத்துடன் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்தான்.

அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் என்ற சிறுவன், பெற்றோர் உதவியுடன் கடந்த 2015ஆம் ஆண்டு ரியான் டாய்ஸ் ரிவியூவ் (Ryan Toys Review) என்ற யூடியூப் சேனலை உருவாக்கினான்.

இதில், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களை விமர்சனம் செய்ததன் மூலம் ரியான் பிரபலம் ஆனான். இந்த சேனலை இதுவரை ஒருகோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

2017-2018ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய வருமானமாக 155 கோடி ரூபாயை ஈட்டியுள்ள ரியான், யுடியூப்பில் அதிகம் சம்பாதிப்போருக்கான போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளான்.