மன்னார் நகர் நிருபர்

யெகோவாவின் சாட்சிகளுடைய 2019 ஆண்டுக்கான மண்டல மநாடானது யெகோவாவின் சாட்சிகளினுடைய ஆளும் குழுவின் ஏற்பாட்டில் யாழ்பாணம் சமுத்திரமஹால் வரவேற்ப்பு மண்டபத்தில் இடம் பெற்றது

யாழ்பாணம் கிளிநொச்சி முல்லைதீவு பகுதியில் உள்ள யெகோவாவின் சாட்சிகளினுடைய பங்கு பற்றுதலுடன் அன்பு ஒரு போதும் ஒழியாது எனும் தொணிப்பொருளில் குறித்த மூன்று நாள் மாநாடு இடம் பெற்றுவருகின்றது

பகை நிறைந்த உலகில் மனிதர்கள் எவ்வாறு அன்பின் மூலம் ஒருவரை ஒருவர் நல்வழியில் நடத்தலாம் என்பது தொடர்பாக பைபிள் அடிப்படையான போதனைகளை உணர்த்தும் வகையில் குறித்த மநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றது

அதே நேரத்தில் குறித்த மாநாட்டில்
தலைக்கணம்,சுயநல ஆசை பெருமை போன்ற குணங்களை தவிர்ப்பதற்கான பைபிள் அடிப்படையான ஆலோசனைகள் போச்சுக்களாகவும் நடிப்புக்களாகவும் வீடியோக்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டன

குறிப்பாக வருடா வருடம் இடம் பெறும் இவ் மாநாடுகளில் இம் முறை சைகை மொழி ஊடான நிகழ்சியும் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்ற்துடன் குறித்த மநாடானது உலகளாவிய ரீதியில் 240 நாடுகளில் 300 க்கு மேற்பட்ட மொழிகளில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது