யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

காமெடி நடிகர்களான வடிவேலு, விவேக், சந்தானம், சூரி ஆகியோர் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் காமெடி நடிகர் யோகி பாபு. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ஜெயிக்கிற குதிர, 100 % காதல், கொரில்லா, சைத்தான் கா பச்சா, அடங்காதே, நின்று கொல்வான், கோமாளி, ஜடா என்று பல படங்கள் உருவாகி வருகிறது. அண்மையில், மிஸ்டர் லோக்கல் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனம் பெற்றது.

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது முத்துக்குமரன் இயக்கத்தில் தர்மபிரபு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக, பேட்ட, சர்கார், தளபதி 63 ஆகிய படங்களையும் சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஜூன் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.