ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்று ஒரேயொரு டெஸ்ட் மற்றும் டி20 முத்தரப்பு தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் அணியில் கடந்த முறை அயர்லாந்து அணிக்கெதிராக விளையாடி ஆறு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

உலகக்கோப்பை தொடரின்போது சர்ச்சையில் சிக்கிய விக்கெட் கீப்பர் முகமது ஷேசாத்திற்கும் இடம் கிடைக்கவில்லை.

டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரஷித் கான் (கேப்டன்), 2. அஸ்கர் ஆப்கன், 3. ஹஸ்மதுல்லா ஷாஹிதி, 4. இஹ்சானுல்லா, 5. இக்ரம் அலி கில், 6. ஜாவெத் அக்மதி, 7. முகமது நபி, 8. ரஹ்மத் ஷா, 9. யாமின் அகமதுசாய், 10. ஷபூர் ஜத்ரன், 11. இப்ராஹிம் ஜத்ரன், 12. ஜாகிர் கான் பக்தீன், 13. சயத் அகமது ஷிர்ஜாத், 14. அஃப்சர் சேசாய், 15. குயாய்ஸ் அகமது.

டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரஷித் கான் (கேப்டன்), 2. அஸ்கர் ஆப்கன், 3. முகமது நபி, 4. ஹஸ்ரதுல்லா சேசாய், 5. நஜீப் தராகாய், 6. முஜீப்-உர்-ரஹ்மான், 7. ஷராபுதீன் அஷ்ரப், 8. நஜிப் ஜத்ரன், 9. ஷஹிதுல்லா கமல், 10. கரிம் ஜனத், 11. குல்பதின் நைப், 12. பரீத் அகமது, 13. ஷஃபிக்யுல்லா ஷஃபக், 14. பசல் நியாசாய், 15. தவ்லத் சத்ரன், 16. நவீன்-உல்-ஹக், 17. ரஹ்மானுல்லா குர்பாஸ்.