ஓரினச்சேர்க்கை மற்றும் கள்ள உறவை ராணுவத்தில் அனுமதிக்க மாட்டோம் என பிபின் ராவத் கூறியுள்ள செய்தி தினத்தந்தியில் வெளியாகியுள்ளது.

“ஓரினச்சேர்க்கை மற்றும் கள்ளஉறவு குற்றம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருக்கிறது. ஆனால் ராணுவத்தை பொறுத்தவரை இது ஏற்கத்தக்கது அல்ல. ராணுவம், சட்டத்தை விட மேலானது அல்ல என்றாலும், ஓரினச்சேர்க்கை மற்றும் கள்ள உறவை ராணுவத்தில் அனுமதிக்க மாட்டோம். ராணுவம் பழமைவாதமானது, ஒரு குடும்பம் போன்றது. எனவே இதில் மேற்படி செயல்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது” என்று அவர் கூறிய செய்தி, தினத்தந்தியிலும் வெளியாகியுள்ளது.