நடப்பு ஆண்டுக்கான பிபா சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் மெஸ்சி, ரொனால்டோ ஆகியோரை ஓரங்கட்டி, குரோசியாவின் லூகா மாட்ரிக் இவ்விருதை தட்டிச்சென்றார்.

சர்வதேச கால்பந்து உலகில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) ஆண்டுதோறும் கடந்த 1956 முதல் பலூன் டி’ஆர் (சிறந்த கால்பந்து வீரர்) விருது வழங்கப்படுகிறது. இதை அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் அதிகபட்சமாக தலா 5 முறை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2008 முதல் சுமார் 10 ஆண்டுகளாக இவ்விருதை மாறி மாறி வென்று மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் கால்பந்து ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுகள் பாரீஸில் நடக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

இதில் ஜாம்பவன்களாக திகழ்ந்த போர்ச்சுகலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி அகியோரை பின்னுக்கு தள்ளி குரோசியாவின் லூகா மாட்ரிக் இவ்விருதை தட்டிச்சென்றார். இதன் மூலம் பிபா சிறந்த வீரர் விருதை வெல்லும் முதல் குரோசிய வீரர் என்ற வரலாறு படைத்தார் லூகா மாட்ரிக்.