உலகின் பெரிய இராணுவ சரக்கு விமானமான சுப்பர் கலெக்ஸி ரக கலங்கங்கள்ஒஸ்பிரே ரக சிறப்பு கலங்கள் கடந்த 2 நாட்களில்லண்டன் நோர்த்ஹோல்ட் விமானத்தளத்தில் இடைக்கிடையே இரைச்சலுடன் ஏறி இறங்கின.தாம் கொண்டுவந்தஆயுத தளவாடங்கள் மற்றும் வாகனங்களை இறக்கித்தள்ளின

150 க்கு மேற்பட்ட இரகசிய அமெரிக்க முகவர்களும் ஆயுததாரிகளாகலண்டனில் குதித்துவிட்டனர். ஆம் “ஒப்ரேஷன் றிங் ஓப் ஸ் ரீ ல் “( உருக்கு வளைய நடவடிக்கை)ஆரம்பமாகப் போகிறது.

உலகின் தலைசிறந்த பாதுகாப்பு வாகனமான லிமோ வண் இன் தலைமையில்பல லிமோசின் வாகனங்களை கொண்ட அதியுச்ச பாதுகாப்பு வாகனத்தொடரணியும் தயாராகி விட்டது.

இந்த வாகனத்தொடரணியில் அதிசிறப்புதொடர்பாடல் கருவிகள், இரத்தம் மற்றும் மருத்துவ சேவைப்பிரிவுகள் ஒருபுறமும் அதிநவீனஆயுதங்களை தாங்கிய டெல்ரா போர்ஸ் படையினர் இடம்பிடிக்க காத்துள்ளனர்.

இவையாவும் பிரித்தானிய வானிலும் தரையிலும் உள்ள நிலைமை. இதேபோலபிரித்தானியாவின் தென் கடற்பிராந்தியத்தை நோக்கி பெரியதொரு விமானந்தாங்கி கப்பல் நகர்கின்றது.

இதிலும்அதிநவீன ஆயுதங்களை தாங்கிய டெல்ரா போர்ஸ் துரப்புக்களைகாவிப்பறக்கும் பிளெக் ஹாக் ரக உலங்குவானூத்திகள் தரித்து நிற்கின்றன.

இதனைவிட மற்றும் விமானமாகவும் உலங்குவானூத்தியாகவும் மாறி மாறிதொழிற்படக்கூடிய ஒஸ்பிரே ரக சிறப்புக் கலங்களும் இதில் தரித்துள்ளன .

இதனைவிட ரஸ்யாவின் நகர்வுகளைகண்காணித்தபடி பிரித்தானியாவை நோக்கி இன்னொரு விமானந்தாங்கி கப்பலும் மத்தியதரைக்கடலில்இருந்து நகர்கின்றது.

பிரித்தானியாவில் பிரதமர் திரேசாமே தற்போது கடுமையான அரசியல்நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் பிரித்தானியாவை மையப்படுத்தி ஏன் இந்த கடுமையானபாதுகாப்பு ஏற்பாடுகள்?

வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் பிரெக்சிற் அமைச்சர்டேவிட் டேவிஸ் ஆகியோர் தமது பதவிகளை துறந்து அமைச்சரவையை விட்டு சென்றும் விட்டனர்

இந்தநிலையில் பிரித்தானியாவில் ஏன் இந்த கடுமையான பாதுகாப்புஏற்பாடுகள்.

என்ன நடக்கப்போகின்றது?

மறந்து விடாதீர்கள் எதிர்வரும் வியாழக்கிழமையன்று அமெரிக்க அரசதலைவர்டொனால்ட் ரம்ப் 3 நாள் பயணமாக பிரித்தானியாவுக்கு வருகை தருகிறார்.