வெஸ்ட் இண்டீஸ் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி என்றாலும், பேட்டிங் மிகவும் மோசமாக இருந்ததால் பெரும்பாலான முன்னாள் வீரர்கள் விமர்சனம் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் லாரா இடம் பிடித்திருந்த அணியால் கூட இந்திய மண்ணில் தொடரை கைப்பற்ற முடியவில்லை என்று தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டன் கூறுகையில் ‘‘நாங்கள் நம்பர்-1 அணியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அதுவும் அவர்களுடைய சொந்தத மண்ணில். 1994-ல் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய மண்ணில் வெற்றி பெற்றது கிடையாது என்பதை வரலாறே சொல்லும். அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியை பார்த்தீர்கள் என்றால், பிரையன் லாரா மற்றும் தலைசிறந்த வீரர்கள் இருந்தார்கள்’’ என்றார்.