வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் மன்னார் கல்வி வலயம் சம்பியனாகியது.

யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை தொடர்ந்து 5 நாள்கள் இந்த தொடர் நடைபெற்றது.

இருபால் பிரிவிலும் ஒட்டுமொத்தமாக 733 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பிடித்தது மன்னார் கல்வி வலயம். வலிகாமம் கல்வி வலயம் 634 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், யாழ்ப்பாணக் கல்வி வலயம் 529 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும், கிளிநொச்சி கல்வி வலயம் 262 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும், வடமராட்சி கல்வி வலயம் 258 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்தையும் பிடித்தன.

வவுனியா தெற்கு கல்வி வலயம் 245 புள்ளிகளைப் பெற்று ஆறாமிடத்தையும் முல்லைத்தீவு கல்வி வலயம் 222 புள்ளிகளைப் பெற்று ஏழாமிடத்தையும் தென்மராட்சி கல்வி வலயம் 127 புள்ளிகளைப் பெற்று எட்டாமிடத்தையும் பிடித்தன.

துணுக்காய் கல்வி வலயம் ஒன்பதாமிடத்தையும் மடு கல்வி வலயம் பத்தாமிடத்தையும் தீவகம் கல்வி வலயம் பதினோராமிடத்தையும் வவுனியா வடக்கு கல்வி வலயம் பன்னிரெண்டாமிடத்தையும் பெற்றன.