வட மேல் மாகாணத்தில் அமுலி உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடந்ர்து பிற்பகல் 04 மணிக்கு விலக்கப்பட்டு மீண்டும் மாலை 06 மணி முதல் அமுலில் இருக்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 06 மணிக்கு அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 06 மணிக்கு நீக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அப்பிரதேசத்தில் நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது