வட கொரிய தேர்தலில் சர்வாதிகாரத் தலைமையுடைய ஆளும் தரப்புக்கு வரலாறு காணாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

ஆனால், இந்த நாட்டின் வரலாற்றிலேயே, வாக்குச்சீட்டில் கிம் ஜாங்-உன்னின் பெயரே இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை.

இது உறுதி செய்யப்படுமானால், சம்பிரதாய நாடாளுமன்றமாக இருக்கின்ற வட கொரிய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக வட கொரிய தலைவர் போட்டியிடவில்லை என்பது தெரியவரும்.

கிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ-ஜாங் இந்த நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிம் ஜாங்-உன்னின் இளைய சகோதரியான இவர், மெதுவாக செல்வாக்கு மிக்கவராக உருவாகி வருகிறார்.

வட கொரியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், அந்நாட்டை ஆளுவதை சட்டபூர்வமாக்க பயன்படுத்தப்படுகிறது. “இது பொருளில்லாத முறை” என்று சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாக்குச்சீட்டிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு வேட்பாளரின் பெயர்தான் இருக்கும்.

நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படும் 687 பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை கடந்த செவ்வாய்க்கிழமை வட கொரிய ஊடகம் அறிவித்தது.