மன்னார் நகர் நிருபர்

21.09.2019

மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாழ்வுபாடு புனித சூசையப்பர் வாசப்பு நிகழ்வு அருட்தந்தை ஜேசுராஜாவின் ஏற்பாட்டில் அன்னாவியார் கிறிஸ்ரியன் டயஸ் தலைமையில் மாலை 6 மணி தொடக்கம் நண்பகள் 3 மணிவரை தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் இடம் பெற்றது

சுமார் 100 வருடங்களுக்கு முற்பட்ட தென்மோடி கூத்து பாங்கிள் தாழ்வுபாட்டு பங்கு மக்களால் நடத்தப்படும் குறித்த வாசப்பபு நிகழ்வு நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்றைய தினம் இடம் பெற்றது

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மல நாதன் மன்னார் பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹீர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் ராதா பெர்னாண்டோ அருட்தந்தையர்கள் அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் பங்கு மக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

குறித்த வாசகப்பா நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று நாள்ளிரவு தொடக்கம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.